ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
2017ம் ஆண்டு வெளியான 'ஒரு அடார் லவ்' என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியா பிரகாஷ் வாரியர். அப்படத்தில் புருவத்தை தூக்கியபடி கைகளை துப்பாக்கி போல அவர் செய்த சைகை சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருந்தது. அதன் மூலம் சமூக வலைதளங்களில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகளும் அவருக்கு வந்தன. அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பல லட்சம் பேர் பின்தொடர்ந்தனர்.
சில பாலிவுட் படங்களின் நடித்தாலும். போதிய வாய்ப்பு இல்லாமல் இருந்தவர், தற்போது தமிழில் பிசியாகி இருக்கிறார். தனுஷ் இயக்கிய 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த நிலையில் அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' படம் வெளியானது. இதில் பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் 90களில் சிம்ரன் ஆடிய ஹிட் பாடலான 'தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா' பாடலுக்கு பிரியா பிரகாஷ் வாரியர் நடனமாடியிருந்தார்.
இதில் அவர் அப்படியே சிம்ரனை போல ஆடியதாக பாராட்டுகள் குவிந்து வருகிறது. அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் வருவதால் மகிழ்ச்சியில் இருக்கிறார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருப்பதாவது:
குட் பேட் அட்லி படத்தில் நித்யா கேரக்டரில் நடித்ததுதான் எனக்கு கடந்த ஆண்டு கிடைத்த மிகப்பெரிய பரிசு. என்னை நம்பி அந்த கேரக்டரை கொடுத்த ஆதித் ரவிச்சந்திரனுக்கு மிக்க நன்றி. அந்தக் கதாபாத்திரத்திற்கு நான் ஹோம் வொர்க் செய்ய வேண்டுமா என்று கேட்டது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது, “எதற்கும் கவலைப்பட வேண்டாம், உங்கள் பைகளை பேக் செய்து ஸ்பெயின் ஜோலியாவுக்கு வாருங்கள்” என்று இயக்குனர் சொன்னார். நான் அதைத்தான் செய்தேன்.
சில நேரங்களில் குழப்பமாக இருக்கும்போது கூட இயக்குனர் படப்பிடிப்பை எளிதாகவும் வேடிக்கையாகவும் நடத்தினார். உங்களுக்கு வாழ்த்துக்கள். இயக்குனர் குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி. எங்கள் அனைவரையும் நன்றாகக் கவனித்துக் கொண்டதற்கும், எல்லாவற்றையும் முடிந்தவரை வசதியாக மாற்றியதற்கும், மற்றும் முழு தயாரிப்புக் குழுவிற்கும் நன்றி. “தொட்டு தொட்டு” பாடல் படப்பிடிப்பில் எங்களுடன் பொறுமையாக இருந்ததற்கு நன்றி. அசார் மாஸ்டர் என்னை பொறுமையுடன் கையாண்டார். அவருக்கும் நன்றி.
திரிஷா மேடம், ரொம்ப அன்பானவங்க, அவங்க கூட வேலை செஞ்சது ரொம்ப சந்தோஷம். சூழ்நிலை, வானிலை, உடல்நலம் எதுவா இருந்தாலும் அவரின் அர்ப்பணிப்பு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஜாமி, ஜானி, இதை சாத்தியமாக்கிய ஒவ்வொருவருக்கும் நன்றி. குட் பேட் அக்லியை ஏற்றுக்கொண்டு, எல்லா அன்பையும் ஆதரவையும் எங்களுக்குக் கொடுத்த பார்வையாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். இவ்வாறு பதிவிட்டு இருக்கிறார்.