தமிழைத் தொடர்ந்து தெலுங்கில் அறிமுகமாகும் அனுராக் காஷ்யப் | மார்ச் முதல் வாரத்தில் மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு வரும் சிவராஜ்குமார் | 110 கிலோ : மிரள வைக்கும் சமந்தாவின் ஒர்க்அவுட் | டிராகன் வெற்றியை கொண்டாடிய LIK படக்குழு | நயன்தாராவிற்கு வில்லனாக அருண் விஜய்? | 'கிங்ஸ்டன்' நம்ம ஊரு 'ஹாரிபார்ட்டர்' : ஜி.வி.பிரகாஷ் | பிளாஷ்பேக் : மதுரை தமிழ் பேச முடியாமல் பாரதிராஜா பட வாய்ப்பை இழந்த வசந்த் | பிளாஷ்பேக் : நடிகையான சர்க்கஸ் கலைஞர் | கிரிப்டோ கரன்சி மோசடி : காஜல், தமன்னாவுக்கு சம்மன் | முன்னணி ஹாலிவுட் நடிகர், நடிகை மரணம் |
பொதுவாக வெற்றி பெற்ற ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார்கள் என்றால் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு, வசூல், படம் உருவாக்கிய பெயர் இவற்றை மீண்டும் ஒருமுறை விளம்பரம் இல்லாமல் காசாக்குவதற்கு தான். அந்த வகையில் பெரும்பாலான படங்களின் இரண்டாம் பாகங்கள் முந்தைய பாகத்துடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் வெறும் பெயரை மட்டும், அந்த படத்தில் நடித்த ஹீரோவை மட்டுமே தொடர்பு கொண்டதாக இருக்கும், கதை வேறு புதிதாக இருக்கும். ஆனால் பாகுபலி, கேஜிஎப், மற்றும் புஷ்பா படங்கள் போல முழு கதையையும் ஒரே படத்தில் சொல்ல முடியாது என்பதால் சஸ்பென்ஸ் வைத்து அதன் விடையை அடுத்த படத்தில் சொல்வதற்காக இரண்டாம் பாகமாக உருவாகும் படங்கள் வெகு சில மட்டுமே.
அந்த வகையில் கடந்து சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் தான் முதல்முறையாக இயக்குனராகி, மோகன்லாலை வைத்து இயக்கிய லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எம்புரான் என்கிற பெயரில் எடுத்துள்ளார். மோகன்லால், மஞ்சு வாரியர் உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்த பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் இடம்பெறுகின்றனர். அதேசமயம் முதல் பாக கதையின் தொடர்ச்சியாகவே இந்த இரண்டாம் பாகமும் உருவாக்கப்பட்டுள்ளது.
முதல் பாகத்தில் மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் ஆகியோரின் கதாபாத்திரங்கள் மர்மம் நிறைந்ததாகவே இருந்தன. அவர்கள் உண்மையிலேயே யார் அவர்களது பின்னணி என்ன, அவர்களது நட்பு எப்படி உருவானது என்பதை பற்றி எல்லாம் எதுவுமே சொல்லப்படவில்லை, இந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் பிரித்விராஜ் நடித்துள்ள சையத் மசூர் என்கிற கதாபாத்திர போஸ்டர் வெளியாகி உள்ளது. இது குறித்து இயக்குனர் பிரித்விராஜ் கூறும்போது முதல் பாகத்தில் லூசிபர் எழுப்பிய பல கேள்விகளுக்கு இந்த எம்புரான் விடை சொல்லும் என்று கூறியுள்ளார். இதில் மோகன்லாலுக்கும் தனக்குமான முன் கதை சொல்லப்பட இருக்கிறது என்றும் கூறியுள்ளார் பிரித்விராஜ்.