'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
மலையாளத்தில் கடந்த வருடம் மம்முட்டி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றதுடன் வியப்பையும் ஏற்படுத்திய படம் பிரம்மயுகம். காரணம் பதினெட்டாம் நூற்றாண்டு பின்னணியில் படம் முழுக்க கருப்பு வெள்ளை கலரில், அந்த காலகட்டத்திற்கு நம்மை அழைத்துப் போகும் விதமான ஒரு கதை அம்சத்துடன் இந்த படம் உருவாகி இருந்தது. ஹாரர் த்ரில்லராக உருவாகியிருந்த இந்த படத்தில் மம்முட்டி எண்பது வயதான மாந்திரீகர் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்ற இந்த படத்தை ராகுல் சதாசிவன் இயக்கியிருந்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் அடுத்ததாக தற்போது மோகன்லாலின் மகன் பிரணவ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கியுள்ளார். கடந்த மார்ச் மாத இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. 40 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஏப்ரல் மாதம் முடிவதற்குள்ளாகவே இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் தற்போது நிறைவடைந்துள்ளது.