நடிகர்கள் அணிந்துள்ள முகமூடி : மாளவிகா மோகனன் | கமலிடம் கதை சொன்ன அஸ்வத் மாரிமுத்து | மலை போல மாமன் இருக்கேன் : சூரியின் ‛மாமன்' பட டிரைலர் வெளியானது | மதுரையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு : பின்தொடராதீங்கனு சொல்லியும் கேட்காத ரசிகர்கள் | பயங்கரவாதம் மனித குலத்தின் எதிரி, காஷ்மீரில் மோடி அமைதியை கொண்டு வருவார் : ரஜினி பேச்சு | அஜித்தின் 54வது பிறந்தநாள் : ஷாலினி வெளியிட்ட புகைப்படங்கள் | மனைவி , மகளுடன் கீழடி அருங்காட்சியகத்திற்கு சென்ற சிவகார்த்திகேயன் | சினிமா தயாரிப்பில் உலகின் மையமாக மாறி வரும் இந்தியா: மோடி பெருமிதம் | ஆக்ஷன் கலந்த துள்ளல் உடன் வெளிவந்துள்ள ‛ஆயா ரே பாபா' பாடல் | சசிகுமாரின் அடுத்தடுத்த பட இயக்குனர்கள் வரிசை |
மலையாள திரையுலகில் சீனியர் இயக்குனரான சத்யன் அந்திக்காடு, இப்போதும் பிசியாக இயக்குனராக வலம் வருகிறார். தற்போது மோகன்லாலை வைத்து ஹிருதயபூர்வம் என்கிற படத்தை இவர் இயக்கி வருகிறார். இவரது மகன்களான அனுப் சத்யன், அகில் சத்யன் இருவருமே தந்தையின் வழியில் இயக்குனர்களாக மாறி படங்களை இயக்கி வருகிறார்கள். இதில் அனுப் சத்யன் கடந்த 2020ல் துல்கர் சல்மான், சுரேஷ் கோபி நடிப்பில் வெளியான வரனே ஆவஷ்யமுண்டு என்கிற படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் வெற்றி படமாக அமைந்தாலும் ஐந்து வருடங்களில் அவரது இரண்டாவது படம் இன்னும் துவங்கப்படாமலேயே இருக்கிறது.
அதேபோல இரண்டாவது மகனான அகில் சத்யன் கடந்த 2023ல் பஹத் பாசில் நடித்த பாச்சுவும் அற்புத விளக்கும் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படமும் வெற்றி படமாக அமைந்தது. இந்த நிலையில் அவர் தற்போது நிவின்பாலி நடிப்பில் தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துவங்கி விட்டது. ஒரு பேண்டஸி காமெடி, டிராமாவாக இந்த படம் உருவாக இருக்கிறது. இந்த படத்திற்கு தமிழ் இசை அமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இவர் இயக்கத்தில் ஏப்ரல் 28ம் தேதி வெளியான பாச்சுவும் அற்புத விளக்கும் ரிலீஸ் ஆனது. இந்த வருடம் அதே தேதியில் தற்போது தனது இரண்டாவது படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளார் அகில் சத்யன். இதற்கு முன்னதாக இவரது முதல் படத்திலேயே பஹத் பாசிலுக்கு பதிலாக முதலில் நிவின்பாலி தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் நிவின்பாலியின் கால்ஷீட் சரி வராததால் அந்த படத்தில் பஹத் பாசில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.