இந்தியப் படங்களுக்கு சிக்கல் : அமெரிக்காவில் அதிக வரி விதிப்பு | தொடரும் வெற்றியை ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | அட்லி படத்திற்கு அல்லு அர்ஜுனின் புதிய கோச் இவர்தான் | பாத்ரூம் பிரஷ் போன்ற மீசையுடன் ஒருவர் வேண்டும் : தொடரும் பட வில்லன் கிடைத்தது இப்படித்தான் | மீண்டும் பிரபாஸ் உடன் இணையும் தீபிகா படுகோன் | பஹத் பாசில் படத்திற்கு திரைக்கதை எழுதும் வில்லன் நடிகர் | விஜய்யின் ‛ஜனநாயகன்' படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய லைட் மேன்! | மாடலிங் துறையில் இறங்கிய ஷிவானி நாராயணன்! | மீண்டும் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற பவன் கல்யாண் | ஹைதராபாத்தில் 'ஏஐ' ஸ்டுடியோ திறந்த 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு |
நடிகர் மோகன்லாலுக்கு கடந்தாண்டு வெளியான மலைக்கோட்டை வாலிபன், அவரே இயக்கிய நடித்த பரோஸ் இரண்டு படங்களும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியை கொடுக்கவில்லை. என்றாலும் இந்த வருடத்தில் அவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான எம்புரான் மற்றும் தொடரும் என இரண்டு படங்களும் வெற்றிப்படமாக அமைந்து நூறு கோடி வசூலையும் கடந்துள்ளன எம்புரான் படம் சில சர்ச்சைகளை எதிர்கொண்டாலும் கூட 200 கோடி வசூலை கடந்தது. தற்போது தொடரும் படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று குறைந்த நாளிலேயே 100 கோடி வசூலை தாண்டி உள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த வெற்றியை கொண்டாட வேண்டும் என மோகன்லாலின் அனைத்திந்திய கேரளா ரசிகர்கள் மன்றம் முடிவு செய்தது. இதை மோகன்லாலிடம் கூற, அவரும் இதற்கு ஒப்புக்கொண்டார். அந்த வகையில் சமீபத்தில் கொச்சியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டல் ஒன்றில் மோகன்லால் தற்போது நடித்து வரும் ஹிருதயபூர்வம் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. அதனால் இந்த ஹோட்டலிலேயே ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் தொடரும் வெற்றி விழா கொண்டாட்டத்தை நடத்தியுள்ளனர்.
இதில் படத்தின் தயாரிப்பாளர் ரஞ்சித் மற்றும் இயக்குனர் தருண் மூர்த்தி இருவரும் கலந்து கொண்டனர். அப்போது ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்ட மோகன்லால், கேக் வெட்டி சிலருக்கு ஊட்டியும் விட்டார். படத்தின் இயக்குனர் தருண் மூர்த்தி ஆசையாக கேட்டுக் கொண்டதன் பேரில் அவர் கன்னத்தில் அன்பு முத்தமும் இட்டு அவரை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் மோகன்லால்.