தொடரும் வெற்றியை ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால் | அட்லி படத்திற்கு அல்லு அர்ஜுனின் புதிய கோச் இவர்தான் | பாத்ரூம் பிரஷ் போன்ற மீசையுடன் ஒருவர் வேண்டும் : தொடரும் பட வில்லன் கிடைத்தது இப்படித்தான் | மீண்டும் பிரபாஸ் உடன் இணையும் தீபிகா படுகோன் | பஹத் பாசில் படத்திற்கு திரைக்கதை எழுதும் வில்லன் நடிகர் | விஜய்யின் ‛ஜனநாயகன்' படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய லைட் மேன்! | மாடலிங் துறையில் இறங்கிய ஷிவானி நாராயணன்! | மீண்டும் சினிமா படப்பிடிப்பில் பங்கேற்ற பவன் கல்யாண் | ஹைதராபாத்தில் 'ஏஐ' ஸ்டுடியோ திறந்த 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜு | யோகிபாபு மீது தவறு இல்லை: பல்டி அடித்த இயக்குனர் |
மலையாளத்தில் சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான தொடரும் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். தற்போது வசூலில் 100 கோடியை இந்த படம் தாண்டியுள்ளது. இதற்கு முன்பாக ஆபரேஷன் ஜாவா, சவுதி வெள்ளக்கா என இரண்டு படங்களை மட்டுமே இயக்கியுள்ள இவர், மோகன்லால் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை சாதித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சூட்டோடு சூடாக அவர் பஹத் பாசில் நடிக்க இருக்கும் டார்ப்பிட்டோ என்கிற படத்தையும் இயக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்த படத்தில் வில்லனாக நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கிறார். இந்த நிலையில் ஆச்சரியமாக இந்த படத்தின் திரைக்கதையை பிரபல மலையாள வில்லன் நடிகர் ஆன பினு பப்பு என்பவர் எழுதுகிறார். இவர் மறைந்த சீனியர் நடிகரான குதிரவட்டம் பப்பு என்பவரின் மகன் தான். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வரும் இவர் இதே தொடரும் படத்தில் கொடூரமான சப் இன்ஸ்பெக்டர் வேடத்திலும் நடித்த மிரட்டி இருந்தார். அவருக்கும் தொடரும் படத்தின் மூலம் மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.
ஏற்கனவே கிட்டத்தட்ட பத்து படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ள பினு பப்பு, இயக்குனர் தருண் மூர்த்தியின் முந்தைய படமான சவுதி வெள்ளக்காவிலும் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்போது தொடரும் படத்தில் அவர் நடித்ததை தொடர்ந்து, அவர் திறமை மீது உள்ள நம்பிக்கையில் தான் பஹத் பாசில் படத்திற்காக திரைக்கதை எழுதும் பொறுப்பை அவரிடமே ஒப்படைத்துள்ளார் இயக்குனர் தருண் மூர்த்தி.