இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
புஷ்பா 2 படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அல்லு அர்ஜுன், இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஹிந்தியில் ஜவான் என்கிற வெற்றி படத்தைக் கொடுத்துவிட்டு, மீண்டும் தமிழுக்கு வராமல் தெலுங்கில் சென்று கால் பதித்துள்ளார் இயக்குனர் அட்லி. இருவருமே ஆயிரம் கோடி வசூல் படங்களை தந்து விட்டு ஒன்றாக இணைவதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்துள்ளது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனின் கதாபாத்திரத்திற்காக உருவத்தோற்றம் உடலமைப்பில் நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கிறதாம். இதற்காக தற்போது அல்லு அர்ஜுனின் ஸ்பெஷல் கோச்சாக லாய்டு ஸ்டீவன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் வெளிநாட்டை சேர்ந்தவர் என்றாலும் இவர் இந்திய சினிமாவிற்கு ஒன்றும் புதியவரல்ல. ஏற்கனவே ரன்வீர் சிங், மகேஷ்பாபு போன்றவர்களுக்கு கோச் ஆக பணியாற்றியவர் தான். ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர்-க்கும் இவர்தான் கோச்சாக பணியாற்றினார். தற்போது அல்லு அர்ஜுனுக்கு கோச் ஆக மாறியுள்ளார். இவரைப் பொறுத்தவரை ரக்பி மற்றும் கிரிக்கெட் விளையாட்டில் தீவிர பயிற்சி பெற்றவர். அதுமட்டுமல்ல நீச்சல் மற்றும் கடல் தொழில்நுட்பத்திலும் கைதேர்ந்தவர். இவர்தான் அட்லி படம் முழுவதும் அல்லு அர்ஜுனுக்கு கோச்சாக பணியாற்ற இருக்கிறார். அல்லு அர்ஜுனுடன் தான் எடுத்த புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டு இதை உறுதிப்படுத்தியுள்ளார் ஸ்டீவன் லாய்டு.