ரெட்ரோ 4 நாள் தமிழக வசூல் இத்தனை கோடியா? | ஜனநாயகன் படத்தில் குத்தாட்டம் போடுவது யார்? | இந்த வாரம் 10 படங்கள் ரிலீஸ் | பாட புத்தகத்தில் சோழ பேரரசின் வரலாற்றை மறைப்பது ஏன்? மாதவன் கேள்வி | 13 ஆண்டுகளுக்குபின் சந்தானம் பட விழாவில் சிம்பு | கிராமத்து நடிகை பெருமாயி காலமானார் | ஜனநாயகனுக்காக 6 கிலோ மீட்டர் மலையில் நடந்த விஜய் | பிளாஷ்பேக்: முதல் கானா பாடல் | நடிகர் கவுண்டமணி மனைவி காலமானார் | பிளாஷ்பேக்: கடைசி வரை கவர்ச்சியாக நடிக்காத சுஜாதா |
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் சமீபத்தில் வெளியான தொடரும் திரைப்படம் வரவேற்பு பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இதை தருண் மூர்த்தி இயக்கியுள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த படத்தில் மெயின் வில்லனாக சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரகாஷ் வர்மா ரசிகர்களை ரொம்பவே ஆச்சரியப்படுத்தினார். அவரது நடிப்பு அவ்வளவு எதார்த்தமாக இருந்தது. இத்தனைக்கும் இவருக்கு இதுதான் நடிப்பில் முதல் படம் என்றால் நம்ப முடியவில்லை. குறிப்பாக அவரது அடர்த்தியான மீசை, அதற்கு கீழே குள்ளநரித்தனத்துடன் அவர் சிரிக்கும் சிரிப்பு அவரது வில்லத்தனத்தை இன்னும் மெருகூட்டியது அதேசமயம் அந்த மீசை தான் அவரை இந்த படத்தில் வில்லனாக நடிக்க தேர்வு செய்ய வைத்தது என்று கூறியுள்ளார் படத்தின் இயக்குனர் தருண் மூர்த்தி.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இது பற்றி தருண் மூர்த்தி கூறும்போது, “இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் வழக்கமான வில்லன் நடிகர் ஒருவரை நடிக்க வைக்க நான் விரும்பவில்லை. மலையாளம் பேசத் தெரிந்தவராக இருக்க வேண்டும், குரலும் கொஞ்சம் கம்பீரமாக இருக்க வேண்டும்.. குறிப்பாக மீசை நன்கு அடர்த்தியாக, இன்னும் சொல்லப்போனால் பாத்ரூம் கிளீனிங் பண்ணும் பிரஸ் போன்ற அமைப்பில் இருக்க வேண்டும் என்றெல்லாம் அதன் வடிவத்தை திட்டமிட்டு வைத்திருந்தேன். அப்படி படத்தில் உதவி கதாசிரியருடன் பேசிக்கொண்டிருந்த போது தான் அவர் பிரகாஷ் வர்மா குறித்து என்னிடம் கூறினார்.
அவரது குரலை நான் ஒரு முறை ரேடியோ பேட்டியின் போது கேட்டுள்ளேன். அவர் பல விளம்பர படங்களை இயக்கியிருந்தாலும், சினிமாவில் நடிப்புக்கு புதியவர் என்பதால் தயங்கினார். இருந்தாலும் தன்னை ஆடிசன் செய்து பார்த்து விட்டு தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அவரது மீசையை பார்த்ததுமே நான் உருவாக்கி வைத்திருந்த கதாபாத்திரத்திற்கு இவர் தான் பொருத்தமானவர் என்பதை கிட்டத்தட்ட முடிவு செய்து விட்டேன். ஆடிசன் செய்தபோது நடிப்பிலும் பாஸ் மார்க் வாங்கி விட்டார். இப்படித்தான் அவர் இந்த படத்திற்குள் வில்லனாக வந்தார்” என்று கூறியுள்ளார் இயக்குனர் தருண் மூர்த்தி.