15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் |

மலையாளத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு மோகன்லால் நடிப்பில் தொடரும் என்கிற படம் வெளியானது. தருண் மூர்த்தி இயக்கியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை மோகன்லாலுடன் மீண்டும் ஜோடியாக நடித்திருந்தார் ஷோபனா. குடும்ப பின்னணியில் ஆரம்பிக்கும் இந்த படத்தின் கதை போகப்போக அப்படியே ஒரு திரில்லர் ஏரியாவுக்குள் நுழைந்து கடைசி முக்கால் மணி நேரம் ரசிகர்களை அசைய விடாமல் கட்டி போட்டு விடும். அதனாலேயே இந்த படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தற்போது கேரளாவில் மட்டும் 100 கோடி வசூலித்த முதல் படம் என்கிற பெருமையையும் உலக அளவில் 200 கோடியை தாண்டிய படம் என்கிற பெருமையும் பெற்று தற்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்திற்கு பல பிரபலங்களும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஒருபடி மேலே போய் நடிகர்கள் சூர்யா, கார்த்தி இருவரும் சென்னையில் உள்ள தங்களது வீட்டிற்கு இயக்குனர் தருண் மூர்த்தியை வரச்செய்து தங்களது பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பின்போது ஜோதிகாவும் உடன் இருந்தார்.
இது குறித்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ள இயக்குனர் தருண் மூர்த்தி, “உங்களது அழைப்புக்கும் மலையாள சினிமா மீதும் மோகன்லால் சார் மீதும் நீங்கள் வைத்துள்ள அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. தமிழ்நாட்டிலும் தொடரும் அலை தொடர்கிறது” என்று தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.




