தமிழ் சினிமாவில் தொடரும் 1000 கோடி கனவு | ‛சூ ப்ரம் சோ' கன்னட படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய விரும்பும் அஜய் தேவ்கன் | இனி, நடிப்புக்கு முழுக்கு: சமந்தா பிளான் | மருமகனுக்காக மாமா படம் தயாரிப்பாரா? | 2 வருடங்களுக்கு முன் காணாமல் போன மெமரி கார்டை கண்டுபிடிக்க சிறப்பு குழுவை நியமித்த ஸ்வேதா மேனன் | ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் |
இந்திய அளவில் மத்திய அரசால் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகள் தான் திரையுலகினரால் உயர்வாகக் கருதப்படுகிறது. அதன் பிறகு மாநில அளவில் திரையுலகினருக்காக வழங்கப்படும் விருதுகளில் நீண்ட கால பெருமையும், மதிப்புமிக்கதாகவும் கருதப்படுவது நந்தி விருதுகள். ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு திரையுலகினருக்காக வழங்கப்பட்ட விருதுகள் அவை.
1964ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வந்த 'நந்தி விருதுகள்', 2016ம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. ஒன்றுபட்ட ஆந்திர பிரதேச மாநிலம் தெலுங்கானா, ஆந்திரா ஆகிய இரண்டு மாநிலங்களாகப் பிரிந்த பிறகு நந்தி விருதுகள் வழங்கப்படுவதில்லை. இருந்தாலும் இந்த ஆண்டு முதல் 'கட்டார் விருதுகள்' என்ற பெயரில் திரையுலகினருக்கான விருதுகளை வழங்க தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது.
இதனிடையே, கடந்த பல வருடங்களாக பெருமைமிகு விருதாக இருந்த 'நந்தி விருதுகளை' மீண்டும் வழங்க ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநில சினிமாடோகிராபி அமைச்சர் கண்டுல துர்கேஷ் இது பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். விரைவில் அதற்குரிய வேலைகள் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஆந்திர மாநிலத்தில் சினிமாத்துறையின் வளர்ச்சிக்காக முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் திரைப்படக் கொள்கை ஒன்றை உருவாக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதன் மூலம் விசாகப்பட்டிணத்தில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய திரைப்பட ஸ்டுடியோ ஒன்று கட்டப்படும் திட்டம் உள்ளதாகவும், விரைவில் திரைப்படக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடக்க உள்ளதாகவும் பேசியுள்ளார்.
ஒரு காலத்தில் சென்னையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த தெலுங்கு சினிமா தற்போது ஹைதராபாத்தில் செயல்பட்டு வருகிறது. விரைவில் அங்கிருந்து பிரிந்து விசாகப்பட்டிணம் செல்லக் கூடிய சூழல் வரலாம். அது ஆரோக்கியமாகப் போகுமா அல்லது போட்டியாகப் போகுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.