சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

நடிகர் ரவி மோகன் மனைவி ஆர்த்தியை பிரிந்து பாடகி கெனிஷா உடன் நெருக்கமாக உள்ளார். இவர்களின் நெருக்கத்தை குறிப்பிட்டு, ‛அப்பா என்பது வார்த்தை அல்ல பொறுப்பு'' என விமர்சித்தார் ஆர்த்தி ரவி. பதிலுக்கு ரவி மோகன், ‛‛என்னை பொன் முட்டையிடும் வாத்தாக மட்டுமே பார்த்தனர், மனைவியை மட்டுமே பிரிந்தேன், பிள்ளைகளை அல்ல'' என தெரிவித்தார்.
இதற்கிடையே ஆர்த்தியின் அம்மாவான தயாரிப்பாளர் சுஜாதா, ‛‛நான் வாங்கிய கடனுக்கு ஒருபோதும் ரவியை நான் பொறுப்பேற்க கூறியதில்லை. அவர் சொல்வது முற்றிலும் பொய்'' என தெரிவித்திருந்தார்.
இப்படி மாறி மாறி ஒவ்வொருவராக அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் பாடகி கெனிஷா இன்ஸ்டாவில், ‛‛பெரிய சத்தங்களுக்கு மத்தியில் அமைதியான நம்பிக்கை காத்திருக்கிறது. காயங்களை பாடங்களாய் ஏற்கிறேன். சோகத்தின் நடுவே மனம் பாடுகிறது. நாளை விடியல் புதிய துவக்கத்தை நோக்கி பயணக்கிறது'' என குறிப்பிட்டுள்ளார்.
கெனிஷாவின் இந்த பதிவு வைரலாக, என்ன மாதிரியான விடியல் பயணம் இது... என ரசிகர்கள் பலவிதமான கருத்துக்களை பதிவிடுகின்றனர்.