செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவர்தன். 'புன்னகை தேசம், வடுகபட்டி மாப்பிள்ளை, பிறகு, மந்திரன், ஜூனியர் சீனியர்' போன்ற படங்களில் நடித்துள்ளார். இவரது மனைவி சாந்தி, சினிமாவில் ரேஷ்மா என்ற பெயரில் 'கிழக்கு முகம், பூமணி' உள்ளிட்ட சில படங்களில் நாயகியாக நடித்துள்ளார். கடந்த 2021ல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சாந்தி, அதிலிருந்து குணமாகியும் மூச்சு திணறல் பிரச்னையில் தொடர் சிகிச்சையில் இருந்து, பின்னர் உயிரிழந்தார்.
இந்த நிலையில், ஹம்சவர்தன், தற்போது 2வது திருமணம் செய்துள்ளார். கேரளாவை சேர்ந்த நிமிஷா என்பவரை கடந்த ஏப்ரல் 30ம் தேதி திருமணம் செய்துள்ளார். இந்த தகவல் தற்போது தான் வெளியாகியுள்ளது. இதுப்பற்றி நாம் விசாரித்தபோது, 'ஏப்ரல் 30ல் திருமணம் முடிந்தது. நான் கேரளாவில் சினிமா, மாடலிங் துறையில் பணியாற்றியுள்ளேன். அவர்தான் முதலில் காதலை சொன்னார்' எனக் கூறினார் நிமிஷா.