'நந்தி விருதுகள்' பெருமையை மீட்க விரும்பும் ஆந்திரா | சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால் |
நடிகர் விஜய் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வருகிறார். விஜயின் கடைசி படமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படம் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த 'பகவந்த் கேசரி' படத்தின் ரீமேக் என ஆரம்பத்தில் சொல்லப்பட்டது. அதற்கு படக்குழு மறுப்போ, விளக்கமோ தெரிவிக்கவில்லை.
முன்னதாக எச்.வினோத், நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்க இருந்த 'தலைவன் இருக்கிறான்' படம் கைவிடப்பட்டது. இந்த கதையையே விஜயை வைத்து எச்.வினோத் இயக்கி வருவதாகவும் கூறப்பட்டது. அதற்கேற்றார்போல், படத்தின் தலைப்பு 'ஜனநாயகன்' என வைத்துள்ளனர். எனவே, இப்படத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் இறங்கும் விஜய்க்கு ஏற்றார்போல, தலைவன் இருக்கிறான் பட கதையை அரசியல் நெடியுடன் சேர்த்து இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட விஜயின் புகைப்படம் ஒன்று லீக்கானது. அதில், விஜய், போலீஸ் உடையுடன் நிற்பார். அந்த புகைப்படத்தால் இது அரசியல் படமா அல்லது வழக்கமான விஜயின் மாஸ் படமா என்ற குழப்பம் ரசிகர்களிடையே எழுந்தது.
இந்த நிலையில், பாலகிருஷ்ணா நடித்த 'பகவந்த் கேசரி' படத்தின் உரிமத்தை 'ஜனநாயகன்' படக்குழு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுவும், படத்தை மொத்தமும் ரீமேக் செய்வதற்காக அல்ல, அந்த படத்தில் இடம்பெற்ற 'குட் டச் பேட் டச்' காட்சியை போன்று ஜனநாயகன் படத்திலும் வைக்க உள்ளார்களாம். ரிலீஸின்போது பிரச்னை எதுவும் ஏற்படாதவாறு, படத்தின் உரிமத்தையே வாங்கி, அந்த காட்சியை பயன்படுத்த உள்ளார்களாம்.
பகவந்த் கேசரி படத்தில், பள்ளி விழாவில் பங்கேற்கும் பாலகிருஷ்ணா, பெண் குழந்தைகளுக்கு 'குட் டச் பேட் டச்' எது என்று சொல்லிக்கொடுப்பார். குழந்தைகளுக்கான விழிப்புணர்வு காட்சியான இது, பலராலும் பாராட்டை பெற்றது. அதனை பெரிய நடிகர் தன் படத்தில் வைத்ததால், பலருக்கும் சென்றுசேர்ந்தது. அதேபாணியில், ஜனநாயகன் படத்திலும் அந்த காட்சியை இடம்பெற செய்ய உள்ளனர். இதற்காகவே ரூ.4.5 கோடி கொடுத்து உரிமம் வாங்கியுள்ளனர்.