பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் 'ஏஸ்'. இப்படம் வருகின்ற மே 23ம் தேதி அன்று திரைக்கு வருகிறது. இதில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் ருக்மணி வசந்த். இவர் தான் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மதராஸி படத்திலும் நாயகியாக நடிக்கிறார்.
ஏஸ் பட விழாவில் ருக்மணி வசந்த் தமிழ் பேசியது எப்படி என்பது குறித்து அவர் கூறுகையில், "கன்னட படங்களில் நான் நடித்துக் கொண்டிருந்த போது 'ஏஸ்' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் நடிக்க நான் கூகுளின் மூலம் தமிழ் மொழியை கற்றுக் கொண்டேன். அதனால் தான் உங்களோடு இப்படி தமிழில் பேச முடிகிறது. விஜய் சேதுபதி உடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. நான் இதுவரை மிக அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளேன். ஆனால், ஏஸ் ஒரு காமெடி கலந்த அழகான படம்" என தெரிவித்துள்ளார்.