இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நடிகர் அனில் கபூர் ஆகியோரின் தாயாரும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மாமியாருமான நிர்மல் கபூர் நேற்று மாலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 90 வயதான இவர் மருத்துவ சிகிச்சைக்காக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.. பாலிவுட் திரையுலக பிரபலங்கள் பலரும் நேரில் சென்று இவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் சுரீந்தர் கபூரின் மனைவியான நிர்மல் கபூருக்கு போனி கபூர், அனில் கபூர், சஞ்சய் கபூர் என மூன்று மகன்களும் மற்றும் ரீனா கபூர் என்கிற மகளும் இருக்கின்றனர். இதில் போனி கபூர், அனில் கபூர் மற்றும் அவரது வாரிசுகள் திரையுலகில் தற்போது பிரபலமாக இருக்கின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் தான் நிர்மல் கபூரின் 90வது பிறந்தநாளை குடும்பத்தினர் விமரிசையாக கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.