பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் | மலையாள நடிகர் சங்கத்தின் முதல் பெண் தலைவரானார் ஸ்வேதா மேனன் | தெரியாமல் பேசிட்டேன் மன்னிச்சுடுங்க : மிருணாள் | அனிருத்துக்கு எப்போது திருமணம்? கிண்டலாக பதில் சொன்ன அவரின் தந்தை! | கே.பி.ஒய். பாலாவின் ‛காந்தி கண்ணாடி' செப்., 5ல் ரிலீஸ் | ரஜினியின் ஒர்க் அவுட் வீடியோ : வைரலாக்கும் ரசிகர்கள் | கூலியில் வீணடிக்கப்பட்ட பிரபல மலையாள வில்லன் நடிகர் | நடிகர் சங்கத் தேர்தலில் ஓட்டளிக்க வந்த நடிகர் கார் விபத்தில் சிக்கினார் | யாரும் சங்கத்தை விட்டு விலகவில்லை : ஓட்டளித்த பின் மோகன்லால் பேட்டி | கூலியில் கவனம் பெற்ற லொள்ளு சபா மாறன் |
போக்குவரத்து போலீசார் அவ்வப்போது திரைப்படங்களின் போஸ்டர்கள் மற்றும் அதில் இடம்பெறும் காட்சிகளை வைத்து போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'தொடரும்' படத்தின் போஸ்டர் ஒன்றை வைத்து கேரள போலீஸார் ஹெல்மெட் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி சோசியல் மீடியாவில் விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில் மோகன்லால் ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகனம் ஓட்டி செல்கிறார். இதை குறிப்பிட்டு அனைவரும் பாதுகாப்பாக இருக்க ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுங்கள் என்று போலீசார் கூறியுள்ளனர்.
அதே சமயம் மோகன்லால் ரசிகர்கள் பலரும் இதற்கு கிண்டலாக விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள பதில் கருத்துக்களில் கூறப்பட்டுள்ளதாவது, “இது ஒரு படத்தின் போஸ்டர். மோகன்லால் தான் வண்டி ஓட்டுகிறார் என்பது தெரிய வேண்டும் என்பதற்காக ஹெல்மெட் அணியாமல் இந்த போஸ்டரை வெளியிட்டு இருக்கிறார்கள். அது மட்டுமல்ல படத்தின் காட்சிப்படி தனது காரை மகனும் அவன் நண்பர்களும் தெரியாமல் எடுத்து ஓட்டி செல்லும் போது அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக அவசரத்திற்கு கிடைத்த தனது நண்பனின் வண்டியை எடுத்துக்கொண்டு காரை விரட்டி செல்வதாக காட்சி. இதில் ஹெல்மெட் எல்லாம் போட அவர் யோசித்துக் கொண்டிருப்பாரா?
அதேசமயம் இதே படத்தில் இன்னொரு காட்சியில் மோகன்லால் கார் ஓட்டிக் கொண்டு வரும்போது, காருக்கு பக்கவாட்டில், அவருக்கு தெரிந்த ஒர்க்ஷாப்பில் வேலை பார்க்கும் பையன் ஹெல்மெட் அணியாமல் மோகன்லாலுடன் பேசிக்கொண்டே டூவீலர் ஓட்டிக்கொண்டு வருவான். அப்போது அவனிடம் ஹெல்மெட்டை அணிந்து கொண்டு வண்டி ஓட்டு, அதுதான் பாதுகாப்பு என்று மோகன்லால் சொல்வார். உடனே அந்த இளைஞன் ஹெல்மெட்டை எடுத்து அணிந்து கொள்வார். இதெல்லாம் உங்கள் கண்களுக்கு படவில்லையா” என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.