கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

தமிழில் சேரன் இயக்கிய 'தவமாய் தவமிருந்து, பொக்கிஷம்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் மலையாள நடிகை பத்மபிரியா. அதன் பிறகு 'மிருகம்' என்கிற சர்ச்சைக்குரிய படத்தில் நடித்து இன்னும் ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர். சிறந்த நடிப்புக்காக தேசிய விருது, தமிழக, கேரள அரசு விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர். தமிழில் கடைசியாக 'தங்க மீன்கள்' படத்தில் கதாநாயகியாகவும் 'பிரம்மன்' படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கும் நடனமாடி இருந்தார் பத்மப்பிரியா. 2014ல் ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு சில வருடங்கள் மட்டுமே படங்களில் நடித்தவர் தற்போது குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது கணவர் ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்.
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பத்மபிரியா கூறும்போது, “என் கணவரை எப்போது முதன்முறையாக சந்தித்தேனோ, அப்போதே இவர்தான் என் கணவர் என என் மனதிற்குள் தீர்மானித்து விட்டேன். அவர் அரசியல் கட்சியில் நுழைந்தது நானே எதிர்பாராதது. அதேசமயம் ஒரு மனைவியாக அவரது அரசியல் விவகாரங்களில் நான் ஒருபோதும் குறுக்கிடுவது இல்லை. அவரைப் பொறுத்தவரை யாருக்கும் மனதளவில் கூட தீங்கு நினைக்க மாட்டார் என்பதால் அவரது அரசியல் பிரவேசம் என்னை கவலைப்படுத்தவில்லை.
இதில் இன்னொரு விசேஷம் என்ன என்றால் நான் நடித்து வந்த சமயத்தில் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள போவதில்லை என்று சொன்னேன். ஆனால் திருமணம் செய்து கொண்டேன். மீண்டும் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று சொன்னேன். ஆனால் திரும்பவும் நடிக்க வந்து இருக்கிறேன். அரசியலுக்கு வர மாட்டேன் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். ஆனால் வாழ்க்கை என்பது நாம் எதிர்பாராத விஷயங்களைக் கொண்டது. எது கிடைத்தாலும் என்னுடைய முழுமையான பங்களிப்பை அதில் தருவேன்” என்று கூறியுள்ளார்.




