பிளாஷ்பேக் : ஒரே ஹாலிவுட் படத்தை காப்பி அடித்து உருவான இரண்டு தமிழ் படங்கள் | பிளாஷ்பேக் : சொக்கலிங்கம் 'பாகவதர்' ஆனது இப்படித்தான் | சாய் பல்லவிக்கு கிடைத்த ஆசீர்வாதம்! | இந்தியா பசுமையை இழந்து விட்டதால் நியூசிலாந்தில் 'கண்ணப்பா'வை படமாக்கினோம் : விஷ்ணு மஞ்சு | டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல் முதல்பார்வை வெளியானது | ஜுன் முதல் 'கல்கி 2898 ஏடி' இரண்டாம் பாக படப்பிடிப்பு | வீட்டை அடமானம் வைத்து தான் எமர்ஜென்சி படத்தை முடித்தேன் ; கங்கனா ரணாவத் | வேட்டியை அவிழ்த்து அநாகரிக வார்த்தைகள் பேசி மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விநாயகன் | நான் அரசியலுக்கு வருவேனா ? நடிகை பத்மபிரியா சூசக தகவல் | வெற்றிப்படத்தில் நடித்தும் என் காட்சிகள் இடம் பெறவில்லை ; ரியாஸ் கான் விரக்தி |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் நடிகர் உன்னி முகுந்தன் நடிப்பில் 'மார்கோ' என்கிற திரைப்படம் வெளியானது. அதிரடி ஆக்சன் படமாக உருவாகியிருந்த இந்த படத்தை இயக்குனர் ஹனீப் அதேனி இயக்கியிருந்தார். வில்லனாக கபீர் துகான்சிங் நடித்திருந்தார். வன்முறை காட்சிகள் தூக்கலாக இருந்தாலும் கூட இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது. அது மட்டுமல்ல இந்த படம் பாலிவுட்டிலும் வரவேற்பை பெற்றதுடன் வடகொரியாவிலும் பாகுபலி படத்திற்கு அடுத்ததாக வெளியான தென்னிந்திய படம் என்கிற பெருமையையும் பெற்றது.
இப்படி வசூல் ரீதியாகவும் வரவேற்பு ரீதியாகவும் வெற்றி பெற்ற படத்தில் நடிகர் ரியாஸ் கான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக படம் வெளியான போது தான் நடித்த காட்சிகள் ஒன்று கூட படத்தில் இடம் இடம்பெறாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார் ரியாஸ் கான். ஆனால் படத்தின் இயக்குனர்களை ஹனீப் அதேனி படத்தொகுப்பில் இறுதி வடிவம் கொடுக்கும்போது தவிர்க்க முடியாமல் ரியாஸ் கான் நடித்த காட்சிகளை நீக்க வேண்டியதாகி விட்டது என்று கூறி அவரை சமாதானப்படுத்தி உள்ளார்.
இத்தனைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த சமயத்தில் ரியாஸ் கான் ஏற்கனவே ஒரு படத்தில் பேசிய 'கேறி ரிவா மோனே' என்கிற வசனத்தை உன்னி முகுந்தனுடன் இணைந்து பேசி ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டார் ரியாஸ் கான். அது அப்போது வைரலாக பரவி மார்கோ படம் பற்றி ரசிகர்களிடம் பேச வைத்தது. ஆனால் அப்படிப்பட்ட ரியாஸ் கான் வெற்றி படத்தில் நடித்தும் கூட இன்று தனது காட்சிகள் அதில் இல்லையே.. இயக்குனரின் முடிவு என்கிற போது நாம் என்ன செய்வது” என்று தனது விரக்தியை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தியுள்ளார்.