லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பிரபல வில்லன் நடிகரான விஜய ரங்கராஜூ மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார். சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது காயமடைந்ததாகவும் அதன் பிறகு சென்னையில் வந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வந்த நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகவும் சொல்லப்படுகிறது. அவருக்கு தீக்சிதா, பத்மினி என இரண்டு மகள்கள் இருக்கின்றன. இவர் பிறந்தது புனேயில். வளர்ந்தது மும்பையில். நடிகராக அறிமுகமானது தெலுங்கில். பாலகிருஷ்ணா நடித்த 'பைரவ தீபம்' என்கிற படம் மூலம் அறிமுகமான இவர் தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'வியட்நாம் காலனி' திரைப்படம் தமிழிலும் பிரபு நடிக்க அதே பெயரில் ரீமேக் ஆன போது மலையாளத்தில் அந்த படத்தில் வில்லனாக ராவுத்தர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த விஜய ரங்கராஜு தான் தமிழிலும் நடித்தார். அதற்கு முன்பு ரஜினியின் பணக்காரன் உள்ளிட்ட பல படங்களில் சின்னச்சின்ன அடியாள் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு இந்த ராவுத்தர் கதாபாத்திரம் ரசிகர்களிடம் இன்னும் நல்ல அறிமுகம் தேடித்தந்தது. இவரது உண்மையான பெயர் ராஜ்குமார் என்றாலும் சினிமாவிற்காக விஜய ரங்கராஜூ என மாற்றிக்கொண்டார். தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் இவரது மறைவு குறித்த செய்தியை வெளியிட்டு அவருக்கு இரங்கலை தெரிவித்துள்ளது.