ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
தமிழ்நாட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று அங்கு சாதனை படைத்தவர் ஹேமமாலினி, அவர் உச்சத்தில் இருந்த காலத்தில் அவரைப்போன்ற தோற்றம் கொண்ட கன்னட நடிகை பத்மப்பிரியா 'தென்னகத்து ஹேமமாலினி' என்று கொண்டாடப்பட்டார்.
பெங்களூருவை சேர்ந்த பத்மப்பிரியா 1974ம் ஆண்டு 'அடபில்லலா தன்றி' என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். கன்னடத்தில், 'பங்காரத குடி' படம் மூலம் அறிமுகமானார். இவர் 1970களின் பிற்பகுதியில் பிரபலமான நடிகையாக இருந்தார். 1978ம் ஆண்டு ஆபரேஷன் டயமண்ட் ராக்கெட், தாய்க்கே தக்க மகா, சங்கர் குரு ஆகிய மூன்று கன்னட படங்களில் ராஜ்குமாருக்கு ஜோடியாக நடித்தார், மூன்று படங்களுமே வெற்றி பெற்றது. இது இன்று வரை கன்னட சினிமாவில் சாதனையாக பார்க்கப்படுகிறது.
பத்மப்பிரியா தமிழில், 'காரோட்டி கண்ணன்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு வைர நெஞ்சம், மோகனப் புன்னகை, வாழ்ந்து காட்டுகிறேன், குப்பத்து ராஜா, ஆயிரம் ஜென்மங்கள், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் உள்பட பல படங்களில் நடித்தார். வைர நெஞ்சம் மற்றும் மோகனப் புன்னகை ஆகிய படங்களில் சிவாஜிக்கு ஜோடியாக நடித்தார். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனில் எம்ஜிஆருக்கு ஜோடியாக நடித்தார். தமிழில் இவர் கடைசியாக நடித்த படம் 'தொட்டா சிணுங்கி'. அதில் இவர் அம்மா வேடத்தில் நடித்திருந்தார்.
1983ம் ஆண்டு சீனிவாசன் என்பரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வசுமதி என்ற மகள் பிறந்தாள். திருமணமான ஒரு வருடத்திலேயே கணவரை பிரிந்த பத்மப்பரியா சினிமாவில் நடிப்பதை கைவிட்டு தனது பெற்றோடன் சென்னை தியாகராய நகரில் வசித்து வந்தார். 1997ம் ஆண்டு மரணம் அடைந்தார்.