2வது திருமண வதந்தியால் மனவேதனை: நடிகை மீனா | ஆயுத பூஜைக்கு வெளியாகிறது சூர்யாவின் ‛கருப்பு' படத்தின் முக்கிய அப்டேட் | ஹுமா குரோசிக்கு காதலருடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததா? | எப்போது திருமணம்? ஜான்வி கபூர் அளித்த பதில் | 25 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகும் ‛குஷி' | ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ‛ஹிட்டன் கேமரா' | 100 சதவீதம் விஜய்யிசம் ; ‛ஜனநாயகன்' குறித்து படத்தொகுப்பாளர் பகிர்ந்த தகவல் | படம் வெளியாகி ஒரு வருடம் கழித்து மம்முட்டியின் ‛டர்போ' புரோமோ பாடல் ரிலீஸ் ; ரசிகர்கள் கிண்டல் | ‛உஸ்தாத் பகத்சிங்' படப்பிடிப்பை நிறைவு செய்த ராஷி கண்ணா | தாமதமாக சொன்ன ஓணம் வாழ்த்து ; வருத்தம் தெரிவித்த அமிதாப் பச்சன் |
பாலிவுட்டில் 'காபி வித் கரண்' என்கிற பெயரில் இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் நடத்தும் ரியாலிட்டி ஷோ ரொம்பவே பிரபலமானது. அதேபோலத்தான் பாலிவுட் நடிகரான கபில் சர்மாவும் ஒரு காமெடி ரியாலிட்டி ஷோ ஒன்றை நடத்தி வருகிறார். ஹிந்தி படங்கள் மட்டுமல்லாது தென்னிந்தியாவில் குறிப்பாக தெலுங்கில் பிரமாண்டமாக உருவாகும் படங்களைச் சேர்ந்த முக்கிய படக்குழுவினர் இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாலிவுட்டிலும் தங்களது படங்களை பிரபலப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது அட்லி தயாரிப்பில் வருண் தவான், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள பேபி ஜான் என்கிற திரைப்படம் வரும் டிச.,25ம் தேதி ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தை புரமோட் பண்ணும் விதமாக கபில் சர்மாவின் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் அட்லி, வருண் தவான், கதாநாயகிகள் கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பொதுவாக அட்லியின் திறமை மற்றும் அவரது வளர்ச்சி மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் சோசியல் மீடியா மூலமாக அவரது நிறத்தை குறிவைத்து கிண்டலடிப்பதும் விமர்சிப்பதும் உண்டு. அதேபோன்றுதான் இந்த கபில் சர்மாவும் இந்த நிகழ்ச்சியின் போது அட்லியிடம், “நீங்கள் முதன் முதலாக யாரிடமாவது கதை செல்ல சென்றபோது அவர்கள் உங்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் திணறினார்களா? எங்கே அட்லியை காணோம் என கேட்டு இருக்கிறார்களா ?” என்று காமெடியாக கேட்பது போல கேட்டார்.
ஆனால் இது போன்ற பல விமர்சனங்களை தாண்டி வந்துள்ள அட்லி இந்த விஷயத்தை சிம்பிளாக லெப்ட் ஹேண்டில் டீல் பண்ணினார். இதற்கு பதில் அளித்த அவர், “உங்கள் கேள்வியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கு நான் பதில் சொல்ல முயற்சிக்கிறேன். இந்த இடத்தில் என்னுடைய முதல் படத்தை தயாரித்ததற்காக இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸிற்கு மிகவும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். ஏனென்றால் அவர் என்னிடம் கதையை மட்டுமே கேட்டார். ஆனால் இந்த கதையை இயக்குவதற்கு இவன் சரியானவனா ? பார்ப்பதற்கு எப்படி இருக்கிறான் என்றெல்லாம் அவர் கவனிக்கவில்லை. நான் கதை சொன்ன விதம் மட்டுமே அவரை ஈர்த்தது. உலகம் அப்படித்தான் இருக்க வேண்டும். நாம் ஒருவரை தோற்றத்தை வைத்து மதிப்பிடக்கூடாது. அவர்களின் இதயத்தை வைத்து தான் மதிப்பிட வேண்டும்” என்று கூறினார்.
அட்லியின் இந்த பதிலடி வரவேற்பை பெற்றாலும் கபில் சர்மாவின் இங்கிதம் இல்லாத அநாகரிக கேள்விக்கு நெட்டிசன்களிடமிருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.