'கங்குவா' சாதனையை முறியடிக்குமா 'கமல் ரஜினி ரீ யூனியன்' வீடியோ | தடை போடாதீங்க, என்னை விட்டுவிடுங்க : ‛தாய் கிழவி' விழாவில் சிவகார்த்திகேயன் உருக்கம் | தென்னிந்திய சினிமாவில் நிகழ்ந்த அசவுகரியம் : டாப்சி | பவுன்தாயின் சேட்டைகளுடன் பட்டையை கிளப்பும் 'தாய் கிழவி' டிரைலர் | நெகட்டிவா பேசுறவங்களை சுத்தமாக பிடிக்காது என்கிறார் சமந்தா | பிளாஷ்பேக்: பல்வேறு சிறப்பிற்கும், புதுமைக்கும் புகலிடமாய் அமைந்த பைந்தமிழ் திரைக்காவியம் “பாவமன்னிப்பு” | மூன்றாவது முறையாக கிருஷ்ணாவுக்கு ஜோடியான பிந்து மாதவி | மணிரத்னம் படத்தில் இணையும் விஜய் சேதுபதி, சாய் பல்லவி | கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென் | இப்போது வரை என் படங்களை என் குழந்தைகள் பார்க்கவில்லை ; ஷாலினி அஜித் |

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை தொடர்ந்து மலையாள முன்னணி நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் குவிந்து வருகிறது. இதனை சமாளிக்க முடியாமல் மலையாள நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தார்கள்.
இதனை பலரும் விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக நடிகை பார்வதி 'மலையாள நடிகர்கள் கோழைகள்' என்று விமர்சித்தார். இந்த நிலையில் நடிகை பத்மப்பரியா 'மலையாள நடிகர்களுக்கு முதுகெலும்பில்லை' என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: கடந்த 4 வருடங்களுக்கு மேலாக ஹேமா கமிட்டி அறிக்கையை மறைத்து வைத்தது ஏன்? யாருக்காக வெளியிடாமல் மவுனம் காக்கப்பட்டது என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும். பாலியல் விவகாரத்தில் நிர்வாகிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்த மலையாள நடிகர்கள் சங்கத்திற்கு தலையும், முதுகெலும்பும் கிடையாது. அனைவரும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டு உள்ளனர்.
மலையாள சினிமாவில் பவர் குரூப் இருக்கிறது. யார் மறுத்தாலும் அதுதான் உண்மை. தங்கள் கைகளில் அதிகாரம் இருப்பதால்தான் அவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதுதொடர்பாக யாரும் வாயைத் திறக்க மறுக்கின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள விவகாரத்தை ஒரு பாலியல் பிரச்சினையாக மட்டுமே சினிமா துறையினர், பொதுமக்கள் பார்க்கின்றனர். அவர்களுக்கு நடிகைகள் அனைவரும் ஒரு வியாபார பொருள் மட்டுமே. எனக்கு மலையாளத்தில் வாய்ப்புகள் திடீரென குறைந்து விட்டது. அதற்கு என்ன காரணம் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பத்மப்ரியா தமிழில் தவமாய் தவமிகுந்து, மிருகம், பொக்கிஷம், இரும்புக்கோட்டை, முரட்டு சிங்கம் உள்பட ஏராளமான படங்களில் நடித்து இருப்பவர். திருமணமாகி செட்டிலானவர் தற்போது மீண்டும் நடித்து வருகிறார்.