ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
மலையாள திரையுலகில் சமீபத்தில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை அங்கே நிகழும் பாலியல் அத்துமீறல்கள், பெண்களுக்கு சம உரிமை மற்றும் ஊதியம் கொடுக்கப்படாதது உள்ளிட்ட பல விஷயங்களை வெளிச்சம் போட்டி காட்டியது. இதைத் தொடர்ந்து பல நடிகைகள் சினிமாவில் தாங்கள் சந்தித்த துன்புறுத்தல்களை வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். இந்த நிலையில் தமிழில் தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மலையாள நடிகை பத்மபிரியா தமிழ் படம் ஒன்றில் நடித்த போது தான் சந்தித்த கசப்பான அனுபவம் குறித்து தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “தமிழில் நான் நடித்த படம் ஒன்றின் படப்பிடிப்பு நிறைவடைந்த போது அந்த படத்தின் இயக்குனர் அனைவரின் முன்னிலையிலும் என்னை கன்னத்தில் அறைந்தார். ஆனால் மீடியாக்களில் நான் அவரை அறைந்ததாக செய்திகள் வெளியாகின. இது குறித்து நான் திரைப்பட சங்கங்களில் புகார் அளித்தேன். அதன் பிறகு அந்த இயக்குனர் ஆறு மாதம் படம் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டார். நானே அடித்து விட்டு நானே எதற்காக புகார் கொடுக்க வேண்டும் என யாருமே கேள்வி எழுப்பவில்லை” என்று கூறியுள்ள பத்மபிரியா அந்த இயக்குனரின் பெயர் குறித்து வெளிப்படையாக சொல்லவில்லை.
அதே சமயம் அவர் தமிழில் ஆதி கதாநாயகனாக அறிமுகமாகிய மிருகம் படத்தில் இயக்குனர் சாமியின் டைரக்ஷனில் கதாநாயகியாக நடித்தபோதுதான் இப்படி ஒரு சம்பவம் நடந்தது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.