மணிரத்னம் அடுத்த படம் குறித்து தகவல் இதோ | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை |
பைக் ரேஸ் பிரியர்களுக்கு ரொம்பவே பரிச்சயமானவர் டிடிஎப் வாசன். அதிவேகமாக பைக் ஓட்டி சாகசங்கள் செய்து அதை யூடியூபில் பதிவேற்றம் செய்து நிறைய ரசிகர்களை இவர் சம்பாதித்துள்ளார். அதே சமயம் போக்குவரத்து விதி மீறல்கள் உள்ளிட்ட பல வழக்குகள் இவர் மீது பதியப்பட்டு அவ்வப்போது கைது செய்யப்படுவதும் வாடிக்கையாக மாறியது. இதன்மூலம் கிடைத்த புகழால் அறிமுக இயக்குனர் செல்அம் என்பவர் இயக்கும் மஞ்சள் வீரன் என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானார் டிடிஎப் வாசன். ஆனால் தற்போது சில காரணங்களால் இந்த படத்தில் இருந்து அவரை நீக்கி உள்ளதாக அறிவித்துள்ளார் படத்தின் இயக்குனர் செல்அம்.
இது குறித்து அவர் கூறும்போது, “டிடிஎப் வாசன் என்னுடன் பயணிக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால் சூழல் அதற்கேற்றதாக அமையவில்லை. அதனால் புதிய ஹீரோவுக்கான ஆடிசன் தற்போது போய்க்கொண்டிருக்கிறது. அக்டோபர் 15ம் தேதி அது குறித்த அறிவிப்பு வெளியாகும். அதே சமயம் படத்தில் இல்லாவிட்டாலும் டிடிஎப் வாசனுடன் எனது நட்பு தொடரும். டிடிஎப் வாசன் இல்லாமலேயே இந்த படத்தின் 35 சதவீத படப்பிடிப்பை நடத்தி முடித்து விட்டோம்” என்று கூறியுள்ளார், இன்னொரு பக்கம் அக்டோபர் 6ம் தேதி துவங்க உள்ள பிக்பாஸ் சீசன் 8ல் டிடிஎப் வாசனும் முக்கிய போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.