நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

பிரபல யு டியூப்பர் வாசன். பைக் ரைடில் சாகசம் செய்து அதை யு டியூபில் பதிவேற்றம் செய்து அதன் மூலம் புகழ்பெற்றவர். தற்போது 'மஞ்சள் வீரன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். கடந்த மாதம் சென்னை - வேலூர் சாலையில் வீலிங் செய்தபோது விபத்து ஏற்பட்டது. இதில் அவரின் கை எலும்பு முறிந்தது. போக்குவரத்து விதிகளை மீறியதாக அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையான வாசன் சிறை வாசலில் நிருபர்களிடம் கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டது என்னை திருத்துவதற்காக அல்ல. என் வாழ்க்கையை அழிப்பதற்காக செய்த மாதிரி இருக்கிறது. எனது கை முறிந்தது பற்றி கூட நான் கவலைப்படவில்லை. ஆனால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டதை அறிந்தபோது அழுதேன். ஆனால் நான் கட்டாயம் பைக் ஓட்டுவேன்.
எனது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடர்வேன். சர்வதேச ஓட்டுனர் உரிமம் பெற்று மீண்டும் வாகனம் ஓட்டுவேன். திரைப்படங்களிலும் தொடர்ந்து நடிப்பேன். என்னை பார்த்து குழந்தைகள், சிறுவர்கள் கெட்டுப்போகிறார்கள் என்கிற குற்றச்சாட்டை நான் ஏற்க மாட்டேன். வித்தியாசமாக எதை பார்த்தாலும் அவர்கள் ஈர்க்கப்படுவது இயற்கையே. பெற்றோர்கள்தான் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.
நான் என்ன கிரிமினல் குற்றவாளியா? எதற்காக என்னுடைய பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரியவில்லை. இதுவரை நான் நேபாளம் மட்டுமே சென்றுள்ளேன். உலகம் முழுக்க செல்ல வேண்டும் என்பது என் கனவு.
இவ்வாறு அவர் கூறினார்.