பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
வினோத் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் விஜய்யின் கடைசி மற்றும் 69வது படமாக உருவாக உள்ள படத்தில் யார், யார் நடிக்கப் போகிறார்கள் என்ற அப்டேட் நேற்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வெளியாக உள்ளது.
அதற்கான ஒரு சிறு முன்னோட்டத்தை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருந்தது. அவற்றில் முகம் தெரியாத சில உருவப்படங்களை வைத்திருந்தார்கள். அவற்றை வைத்து இவர்கள்தான் அந்த நட்சத்திரங்கள் என விஜய் ரசிகர்கள் அடையாளப்படுத்தி வருகிறார்கள். பாபி தியோல், பிரகாஷ் ராஜ், பூஜா ஹெக்டே, பிரியா மணி, மமிதா பைஜு ஆகியோரது உருவப்படங்கள்தான் அவை என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
அந்த விதத்தில் அவர்கள் அடையாளப்படுத்திய பாபி தியோல் நேற்று விஜய் 69ன் நடிகர்களில் ஒருவராக அறிவிக்கப்பட்டார். அடுத்து வர உள்ள அறிவிப்புகளும் ரசிகர்களின் யூகங்களுக்கு ஏற்றபடி அமையப் போகிறதா என்பது அடுத்தடுத்து தெரிய வரும்.