தயாரிப்பாளர் தக்காளி சீனிவாசன் காலமானார் | போர் சூழலுக்கு மத்தியில் சென்னை திரும்பினார் நடிகர் அஜித்குமார் | பிரியா பவானி சங்கரை தொடர்ந்து ரவிதேஜா படத்தில் இணைந்த தமன்னா! | இன்வெஸ்டிகேஷன் திரில்லர் படத்தில் நடிக்கும் குமரன் | சூப்பர் நேச்சுரல் கிரைம் திரில்லராக உருவாகும் 'மண்டவெட்டி' | தனுசுக்கு ஜோடியாகும் நடிக்கும் ருக்மணி வசந்த்! | 'ஆர்யா 40' படத்தில் இரு நாயகிகள் | 'டென்ஷன்' படத்தில் காமெடி கலந்த வில்லனாக ஆர்.கே.வரதராஜ் | 'ஜெயிலர் 2' படத்தில் ஷாருக்கான் கதாபாத்திரம் என்ன தெரியுமா? | அனிமேஷன் படத்தை இயக்குகிறாரா அனில் ரவிபுடி? |

ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கம், இசை நடிப்பில் செப்டம்பர் 20ல் வெளியான தமிழ்ப் படம் 'கடைசி உலகப் போர்'. இப்படத்திற்கு மிகச் சுமாரான வரவேற்பே கிடைத்தது. ஆதியின் முந்தைய படங்களுடன் ஒப்பிட்டால் அந்த வரவேற்பு மிகவும் குறைவுதான்.
இப்படத்தை ஹிந்தியில் 'லாஸ்ட் வேர்ல்டு வார்' என்ற பெயரில் டப்பிங் செய்து அக்டோபர் 4ம் தேதி வெளியிடுகிறார்கள். அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பையும், படத்தின் டிரைலரையும் வெளியிட்டுள்ளார் தமன்னா.
“வாழ்க்கைக்கு இப்படி ஒரு பார்வை கொடுத்த ஆதியுடன் நிற்பதில் பெருமை கொள்கிறேன். 'மகாராஜா' படத்திற்குப் பிறகு போர் பற்றிய ஒரு அருமையான தாக்கத்தை தன்னுடைய மிகச் சிறப்பான நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் நட்டி. இந்த உலகத்தில் எதையும் விட அமைதிதான் மிகவும் முக்கியம்” எனவும் படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.