அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? |

வீ.ஆர்.சினி கிரியேஷன்ஸ் சார்பில் டாக்டர் அருண் பிரசாத் தயாரிக்கும் படம் 'தி ஸ்டிங்கர்'. ஹரி எழுதி இயக்கும் இந்த படத்தில் சாக்ஷி அகர்வால், அருண் பிரசாத், ஶ்ரீனிவாசன், தீபிகா, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். எம்.எஸ்.காமேஷ் இசை அமைக்கிறார், சபரி ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ஹரி கூறும்போது “சயின்ஸ் பிக்ஷன் திரில்லர் வகை படமாக உருவாகிறது. உலக தரம் வாய்ந்த தொழில்நுட்பத்துடன் அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகிறது. ஏலியனோடு இணைந்து மற்ற மிருகங்கள் மற்றும் கதைகளங்கள் பார்வையாளர்களுக்கு விஷுவல் டிரீட்டாக அமையும். அனிமேஷன் வேலைகள் முடிந்திருக்கிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றார்.




