நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அழகே அவரது இரட்டை நாடிதான். கீழ் தாடையில் இருக்கும் அந்த சின்ன பள்ளம்தான் அவரின் அடையாளம். ஆனால் அதுவே ஒரு காலத்தில் அவருக்கு பிரச்சினையாக இருந்துள்ளது.
நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்த எம்ஜிஆரை 'சதிலீலாவதி' படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் எல்லீஸ் டங்கன். அதை தொடர்ந்து அவரின் இரு சகோதரர்கள், மீரா, தாசிப்பெண் உள்ளிட்ட பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தார். எல்லீஸ் டங்கன், டிஆர் சுந்தரம் இணைந்து 'மந்திரிகுமாரி' படத்தை இயக்கும்போது அதில் எம்ஜிஆர்தான் ஹீரோ என்று முடிவானது. அந்த படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய கருணாநிதி, எம்ஜிஆர்தான் நடிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.
ஆனால் அதற்கு எல்லீஸ் டங்கன் ஒத்துக் கொள்ளவில்லை. ஒரு இளவரசனுக்குரிய முகலட்சணம் எம்ஜிஆரிடம் இல்லை. குறிப்பாக அவரது கீழ்தாடையில் உள்ள பள்ளம் ராஜா முகத்தக்கு பொருந்தாது என்றார். இதனால் எம்ஜிஆரை மாற்றும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கருணாநிதி எம்ஜிஆரின் தாடை பள்ளத்தை மறைக்க சின்னதாக ஒரு தாடி ஒட்டிக் கொள்ளலாம் என்று சொன்னார். அதன்படி தாடி ஒட்டிக் கொண்டபிறகு எல்லீஸ் டங்கனுக்கு திருப்தி வந்தது. எம்.ஜி.ஆரும் நடித்தார்.
ஆனால் பிற்காலத்தில் அந்த தாடை பள்ளம்தான் எம்ஜிஆரை மக்கள் ரசித்து போற்றுவதற்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது. பிற்காலத்தில் எல்லீஸ் டங்கன் பொருளாதார சிக்கலுக்கு ஆளானபோது அந்த காலத்திலேயே லட்சக் கணக்கில் பணம் கொடுத்து காப்பாற்றினார் எம்ஜிஆர். அவரது ஊட்டி எஸ்டேட்டை சிலர் அபகரிக்க முயன்றபோது அதையும் காப்பாற்றிக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.