பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி | டிசம்பரில் திரைக்கு வரும் வா வாத்தியார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ராஜூ முருகனின் மை லார்ட் என்ன பேசுகிறது? | டிரைலர் உடன் புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த அதர்வாவின் தணல் படக்குழு! | 'குட்டி ஏஐ அனுஷ்கா' வீடியோ பகிர்ந்த அனுஷ்கா | வெளிநாடுகளில் 20 மில்லியன் டாலர் வசூலித்த 'கூலி' |
அல்லு அர்ஜுன் - தெலங்கானா மாநில அரசு இடையிலான மோதல் விவகாரம் தெலுங்குத் திரையுலகினரை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 'புஷ்பா 2' பிரிமியர் காட்சியில் பெண் மரணம், அல்லு அர்ஜுன் கைது, ஜாமின் விடுதலை, சட்டமன்றத்தில் முதல்வர் பேச்சு, அல்லு அர்ஜுன் பத்திரிகையாளர் சந்திப்பு, அல்லு அர்ஜுன் விசாரணைக்கு அழைப்பு என கடந்த ஒரு வார காலமாகவே தெலங்கானா மாநிலத்தில் அரசியலுக்கும், சினிமாவுக்கும் இடையில் சர்ச்சை நிலவி வருகிறது.
சிறையிலிருந்து வெளிவந்த அல்லு அர்ஜுனை தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் சந்தித்துப் பேசியது ஆந்திர முதல்வரை கடும் கோபத்திற்கு ஆளாக்கி இருக்கிறது. அதனால்தான் அவர் சட்டமன்றத்தில் கடுமையாக விமர்சித்துப் பேசினார் என்று சொல்கிறார்கள். அவரது பேச்சு அல்லு அர்ஜுன் இமேஜையும் மொத்தமாக டேமேஜ் செய்துவிட்டது. அதற்கு மேலும் ஆதாரத்தைக் கொடுக்க கூட்ட நெரிசல் நடந்த தியேட்டர் சிசிடிவி வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார்கள். அல்லு அர்ஜுன் செய்தது தவறு என்று மக்கள் மத்தியில் பதிய ஆரம்பித்துவிட்டது.
தெலங்கானா அரசு சிறப்புக் காட்சிகள் ரத்து, டிக்கெட் கட்டண உயர்வு ரத்து என்பதும் பெரிய தயாரிப்பாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. தெலங்கானா அரசை பின்பற்றி ஆந்திர மாநில அரசும் அப்படியான அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பேசி வருகிறார்கள். அடுத்தடுத்து பல பெரிய படங்கள் வெளிவர உள்ளது. ஹைதராபாத் மாநகரின் தியேட்டர் வசூலும் அவர்களுக்கு மிக முக்கியமானது. அதனால், நடிகர் சிரஞ்சீவி தலைமையில் ஒரு குழுவை அமைத்து தெலங்கானா முதல்வரை சந்தித்துப் பேச திட்டம் நடந்து வருகிறதாம். தேவைப்பட்டால் சிரஞ்சீவியின் தம்பியும், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் உதவியையும் நாடலாம் என்றும் பேசி வருகிறார்களாம்.
அல்லு அர்ஜுன் இன்று காலை போலீஸ் விசாரணைக்கு செல்ல உள்ளார். அதன்பின் இந்த விவகாரத்தில் மேலும் திருப்பங்கள் நடக்கலாம். அதைப் பொறுத்து அடுத்த கட்ட நகர்வு இருக்கும் என்று தெரிகிறது.