தனுஷை நோக்கி படையெடுக்கும் புதிய பட வாய்ப்புகள் | விமர்சனங்களுக்கு மத்தியில் 100 கோடியை நெருங்கும் 'முபாசா' | கணவர், குழந்தைகளுடன் பாரிஸிற்கு சுற்றுலா சென்ற நயன்தாரா | இளம் வயதில் இரவு முழுக்க குடிப்பேன் - அமீர் கான் ஓபன் டாக் | என் பெயரை பயன்படுத்தி அரசு திட்டத்தில் மோசடி : கண்டித்த சன்னி லியோன் | மீண்டும் இணையும் அஜித் - ஆதிக் கூட்டணி | வளர்ப்பு நாய் இறப்பு: திரிஷா வருத்தம் | சிரஞ்சீவியை இயக்க கனவு கண்ட ஷங்கர் | அகத்தியா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அடிதடி, ரவுடித்தனத்தை விட்டுறேன்... இனி காதல் மட்டும் தான் : சூர்யாவின் ‛ரெட்ரோ' |
மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால், தற்போது பரோஸ் என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறியுள்ளார். தற்போது வரை பிஸியான நடிகராக நடித்து வந்தாலும் அவருக்குள் இருக்கும் டைரக்சன் ஆசை இப்படி ஒரு படத்தை இயக்கத் தூண்டியது. படமும் நாளை (டிச-25) ரிலீஸ் ஆக இருக்கிறது. வாஸ்கோடகாமா இந்தியாவிற்கு வந்து சென்ற வரலாற்று பின்னணியில் இந்த படத்தை 3டியில் உருவாக்கியுள்ளார் மோகன்லால்.
அதேசமயம் பரோஸ் திரைப்படம் தான், தான் இயக்கும் முதலும் கடைசியுமான திரைப்படம் என்றும் இனி அடுத்த படம் இயக்கப் போவதில்லை என்றும் சமீபத்திய பேட்டி ஒன்றில் திட்டவட்டமாக கூறியுள்ளார் மோகன்லால். மேலும் இப்படி முதல் படத்தையே 3டியில் இயக்க வேண்டும் என தோன்றியது எதனால் என்கிற ஆச்சரியமான காரணத்தையும் அவர் கூறியுள்ளார்.
“பொதுவாகவே படங்கள் 3டியில் வெளியாகும் போது பார்வையாளர்களுக்கு என அதற்கேற்ற 3டி கண்ணாடி வழங்கப்படும். ஆனால் பெரும்பாலானவர்களுக்கு இப்படி கண்ணாடி அணிந்து கொண்டு பார்க்கும் போது கூட காட்சிகள் தெளிவில்லாமல் தெரிவதும், பலருக்கு தலைவலி ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்து தான் வருகிறது. இப்படி கண்ணாடி அணியாமலேயே பார்க்கும் விதமாக ஒரு 3டி படத்தை ஏன் உருவாக்க முடியாது என்கிற எண்ணம் எனக்குள் தோன்றியது.
இது போன்ற சவாலான முயற்சிகளை மேற்கொள்வது எனக்கு பிடிக்கும். அதனைத் தொடர்ந்து நான் எடுத்த முயற்சிகளின் பலன் தான் இப்போது பரோஸ் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தை 3டி கண்ணாடி அணியாமலேயே பார்க்க முடியும். அதே சமயம் 3டி படம் பார்த்த அந்த முழுமையான அனுபவம் கிடைக்கும். அதற்கான தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார் மோகன்லால்.