அல்லு அர்ஜுன் மீது மீண்டும் காவல்துறையில் ஒரு புகார் | குழந்தைகளுடன் ஒன்றாக திருமண நிகழ்வில் கலந்து கொண்ட சூர்யா-ஜோதிகா | விஜய் சார், உங்க முன்னாடி நாங்க குழந்தைங்கதான் - வருண் தவான் | தனுஷை நோக்கி படையெடுக்கும் புதிய பட வாய்ப்புகள் | விமர்சனங்களுக்கு மத்தியில் 100 கோடியை நெருங்கும் 'முபாசா' | கணவர், குழந்தைகளுடன் பாரிஸிற்கு சுற்றுலா சென்ற நயன்தாரா | இளம் வயதில் இரவு முழுக்க குடிப்பேன் - அமீர் கான் ஓபன் டாக் | என் பெயரை பயன்படுத்தி அரசு திட்டத்தில் மோசடி : கண்டித்த சன்னி லியோன் | மீண்டும் இணையும் அஜித் - ஆதிக் கூட்டணி | வளர்ப்பு நாய் இறப்பு: திரிஷா வருத்தம் |
2024ம் வருடத்தின் கடைசி கட்டத்திற்கு வந்துவிட்டோம். இந்த வருடம் 230க்கும் மேற்பட்ட நேரடி தமிழ்ப் படங்கள் வெளியாகி உள்ளன. அதே சமயம் மற்ற மொழிகளிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் டப்பிங் படங்களும் வந்துள்ளன. சுமார் 50க்கும் மேற்பட்ட டப்பிங் படங்கள் இந்த வருடத்தில் வெளிவந்திருக்கும்.
வருடத்தின் கடைசி வெளியீட்டு வாரத்தில் நாளை கிறிஸ்துமஸ் தினத்தில் மட்டும் ஒரே வாரத்தில் மூன்று மொழிகளிலிருந்து தலா ஒரு டப்பிங் படம் வெளியாக உள்ளது.
மலையாளத்தில் மோகன்லால் இயக்கி, நடித்துள்ள 'பரோஸ் 3டி' படம், கன்னடத்தில் கிச்சா சுதீப் நடித்துள்ள 'மேக்ஸ்' படம், தெலுங்கில் நிவேதா தாமஸ் நடித்துள்ள '35 சின்ன விஷயம் இல்ல' ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன.
இவற்றில் 'பரோஸ்' படம் நாளை மலையாளம், தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியாகிறது. ‛மேக்ஸ்' படம் நாளை கன்னடத்திலும் தமிழில் டிச., 27ம் தேதியும் வெளியாகின்றன. '35 சின்ன விஷயம் இல்ல' படம் தெலுங்கில் '35 சின்ன கத காது' என்ற பெயரில் கடந்த செப்டம்பர் மாதம் 6ம் தேதி வெளியானது.
இந்த வருடம் வெளிவந்த டப்பிங் படங்களில், 'புஷ்பா 2, லக்கி பாஸ்கர்' ஆகிய தெலுங்குப் படங்கள், மலையாளத்தில் நேரடியாக வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஆகிய படங்கள் நன்றாக வசூலித்து லாபத்தைக் கொடுத்த படங்களாக அமைந்தன.