விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் | நடிகர் பாலாவின் மனைவிக்கு லாட்டரியில் 25 ஆயிரம் பரிசு |
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து விட்ட முன்னணி நடிகர் பிரித்விராஜ். தனது லட்சிய கனவான டைரக்சன் துறையிலும் அடி எடுத்து வைத்து கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு நடிகர் மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற மிகப்பெரிய வெற்றி படத்தை இயக்கினார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அவரை வைத்தே ப்ரோ டாடி படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டார். தற்போது லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள எம்புரான் படத்தையும் இயக்கி முடித்து விட்டார். முதல் பாகத்தைப் போல இந்த இரண்டாம் பாகமும் விறுவிறுப்பாக உருவாகியுள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மோகன்லால்.
மேலும் பிரித்விராஜுடன் தான் பணிபுரிந்த அனுபவம் குறித்து மோகன்லால் கூறும்போது, “பிரித்விராஜ் ஒரு அற்புதமான இயக்குனர். அவருக்கு எல்லாவித சாதனங்களும், லென்ஸ்களும், நடிகர்களும், அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பதும் நன்றாகவே தெரியும். தான் நினைத்தது வரும் வரை எந்த ஒரு நடிகரையும் விட மாட்டார், அவருடன் பணியாற்றுவது கொஞ்சம் கடினம் தான், நாம் நல்ல நடிகராச்சே என்கிற ஈகோ எல்லாம் அவரிடம் செல்லுபடி ஆகாது, அவரிடத்தில் நீங்கள் எப்படியும் உங்களை சரண்டர் பண்ணிக் கொண்டால்தான் சிறப்பாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.