ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மலையாள திரையுலகில் மினிமம் கியாரண்டி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ஜெயராம். சமீப வருடங்களாக தன்னை குணச்சித்ர நடிகராக மாற்றிக் கொண்டு மலையாளம் மட்டுமல்ல தமிழ், தெலுங்கு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார். அவ்வப்போது சில படங்களில் கதாநாயகனாகவும் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது ஜெயராம், அவரது மகன் காளிதாஸ் இருவரும் இணைந்து நடிக்கும் ‛ஆசைகள் ஆயிரம்' என்கிற படம் தயாராகி வருகிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் காளிதாஸ் இதற்கு முன்னதாக 2000ல் ஜெயராம் நடிப்பில் வெளியான கொச்சு கொச்சு சந்தோசங்கள் என்கிற படத்தில் சிறு வயது கதாபாத்திரத்தில் ஜெயராமின் மகனாகவே நடித்திருந்தார். அந்த வகையில் 25 ஆண்டுகள் கழித்து தற்போது தனது தந்தையுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் காளிதாஸ். இதை ஜி பிரஜித் என்பவர் இயக்குகிறார். தற்போது வெளியாகி உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டு, நீண்ட வருடங்களுக்குப் பிறகு தனது தந்தையுடன் இணைந்து நடிக்கும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் காளிதாஸ் ஜெயராம்.