விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் | இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்? | விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி | சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா | ஸ்ருதிஹாசன் குரலில் வெளிவந்த டிரெயின் முன்னோட்டம் | டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 10 வருட பயணத்தை நினைவுகூர்ந்த ஆதி |
சின்னத்திரை பிரபலமான மணிமேகலை, உசேன் என்பவரை காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டாலும் இப்போது தனது திறமையால் அடுத்தடுத்த வெற்றிபடிக்கட்டுகளில் அடியெடுத்து வைக்கிறார். சிறிது காலம் முன் சொந்தமாக பண்ணை வீட்டை கட்டி வந்த மணிமேகலை தற்போது சென்னையிலேயே சொந்தமாக ப்ரீமியம் அபார்ட்மெண்ட் வாங்கியிருக்கிறார். இதனை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள மணிமேகலை, 'திருமணமான புதிதில் வீட்டு வாடகை கொடுக்கவே கஷ்டப்பட்டோம். இன்று சென்னையில் ப்ரீமியம் அப்பார்ட்மெண்ட் வாங்கியிருக்கிறோம்' என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து மணிமேகலை - உசேன் தம்பதியினருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.