மூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி | தமிழில் வெளியாகும் ஹிந்தி படம் | 32 துறைகளை கையாண்டு ஒரு படம் உருவாக்கிய பெண் இயக்குனர் | சசிகுமார் படத்தில் இரண்டு நாயகிகள் அறிமுகம் | பிளாஷ்பேக் : தமிழில் சோபிக்க முடியாமல் போன பாலசந்தர் அறிமுகம் | பிளாஷ்பேக் : மின்னி விலகிய வரதன் | வட சென்னையில் இரண்டு தியேட்டர்கள் நிரந்தர மூடல் | இன்னமும் இறுதி ஆகாத 'இளையராஜா' பயோபிக் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் மூன்று இளம் இயக்குனர்கள்! | குட் பேட் அக்லி படத்திற்காக அனிருத் பாடிய முதல் பாடல் விரைவில் வெளியாகிறது |
கராத்தே மாஸ்டரும், நடிகருமான சிஹான் உசேனி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், சினிமாவிலும் நடித்திருக்கிறார். மிகவும் பாசிட்டிவான நபரான இவரை தமிழ்நாட்டில் பலருக்கும் பிடிக்கும். தற்காப்பு கலை பயில விரும்பும் மாணவர்களுக்கு பள்ளி ஒன்றையும் நடத்தி வருகிறார். உசேனி தற்போது ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.
இந்நிலையில், அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், ‛‛தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் டாப் நட்சத்திரங்களாகவும், இன்றைய அரசியல் ஆளுமைகளாகவும் வலம் வரும் பவன் கல்யாண் மற்றும் விஜய்யிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், 'மாணவர்களுக்காக நான் கட்டி வைத்திருக்கும் இந்த கலை மாளிகையை விற்று அந்த பணத்தை 8 ஆண்டுகளுக்கு மேல் என்னிடம் பயிற்சி பெறும் மாணவர்கள் ஒலிம்பிக்கில் மெடல் வாங்க பயன்படுத்த வேண்டும்.
தெலுங்கு நடிகர் மற்றும் இன்றைய துணை முதல்வரான பவன் கல்யாண் என்னுடய மாணவர் தான். ஒன்றரை வருடம் என்னிடம் பயிற்சி எடுத்துக் கொண்டார். அவர் பெயர் கல்யாண் குமார். அவருக்கு பவன் என்று பெயர் வைத்ததே நான் தான். இன்று துணை முதல்வராக இருக்கும் பவன் கல்யாண் என்னுடைய கலை மாளிகையை முடிந்தால் அவரே 11 கோடிக்கு வாங்கி கலைக்கோயிலாக மாற்ற வேண்டும்.
அதுபோல் நடிகர் விஜய்க்கும் நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். அவர் தமிழ்நாடு முழுவதும் வீட்டுக்கொரு வில்வித்தை வீரர், வீராங்கனையை உருவாக்க வேண்டும்' என்று அந்த பேட்டியின் வாயிலாக தனது ஆசையை கூறியிருக்கிறார்.
சினிமாவில் கிடைத்த பிரபலத்தை தாண்டி, இன்று அரசியல் களமாடி வரும் இந்த இரண்டு டாப் ஸ்டார்களும், தங்களது முன்னாள் ஆசிரியரின் வேண்டுகோளை ஏற்றுக் கொள்வார்களா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.