மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிப்புக்கு திரும்பிய ஐஸ்வர்யா ராய் | ஓய்வு பெற துடிக்கும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கும் சல்மான் கான் | என்னுடன் நடிக்க மறுத்தவர்கள் இப்போது என் படத்தை புரமோட் செய்கிறார்கள் ; கென் கருணாஸ் | மேடையில் நாற்காலி கவிழ்ந்து கீழே விழுந்த நாகசைதன்யா | ஒரே நாளில் பரபரப்பை ஏற்படுத்திய விஜய் - த்ரிஷா, ரவி மோகன் - கெனிஷா | வரலட்சுமி இயக்குனராக அறிமுகமாகும் 'எஸ் சரஸ்வதி' தெலுங்கில் மட்டும் ரிலீஸ் | விஜய் தேவரகொன்டா - ராஷ்மிகா வரவேற்பு: தமிழ், கன்னடம், ஹிந்தி திரையுலகினர் 'ஆப்சென்ட்' | தான் எழுதிய 'மைல்கல்' புத்தகத்தை ரஜினியிடம் பரிசாக கொடுத்த இயக்குனர் ஞானவேல் | ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் |

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி பெரும் வசூலைக் குவித்த படம் 'புஷ்பா 2'. அப்படத்தின் பிரிமியர் காட்சி ஐதராபாத்தில் நடந்தபோது அதில் அல்லு அர்ஜுன் கலந்து கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி என்ற 39 வயது பெண் ஒருவர் இறந்து போனார். அவரது மகன் 9 வயதான ஸ்ரீதேஜ் நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்தான். அவனை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக செகந்தரபாத்தில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளான். அவன் உயிர் பிழைத்துக் கொண்ட போதும், அவனுக்கு முழுமையான நினைவு இன்னும் திரும்பாமல் உள்ளது. யாரையும் அடையாளம் காணும் நிலையில் அவன் இல்லையாம். உணவும் வயிற்றுப் பகுதிக்கு நேரடியாக அனுப்பப்படுகிறதாம்.
இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். அதன்பின் தெலங்கானா மாநிலத்தில் அனைத்து விதமான சிறப்புக் காட்சிகளுக்கும் அரசு தடை விதித்தது. பின்னர் அல்லு அர்ஜுனும் அந்த சிறுவனை மருத்துவமனைக்குச் சென்று நேரில் நலம் விசாரித்து வந்தார்.
அந்தக் குடும்பத்திற்கு அல்லு அர்ஜுன் ஒரு கோடி ரூபாயும், தயாரிப்பு நிறுவனமான மைத்ரிமூவி மேக்கர்ஸ் 50 லட்ச ரூபாயும், இயக்குனர் சுகுமார் 50 லட்ச ரூபாயும் நிதியுதவி செய்துள்ளனர்.




