'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா |
சின்னத்திரை நடிகரான நேத்ரன் சில தினங்களுக்கு முன் புற்றுநோய் பாதிப்பால் காலமானார். இந்நிலையில், சக நடிகரும் நண்பருமான வருண் உதய் நேத்ரன் குறித்து உருக்கமான சில செய்திகளை கூறியிருக்கிறார். அவர் பேசியபோது, 'நேத்ரனுடன் நான் பல சீரியல்களில் இணைந்து நடித்துள்ளேன். சூட்டிங் ஸ்பாட்டில் யாரிடமும் கோபப்படமாட்டார். எப்போதும் பாசிட்டிவாக பேசுவார். அவர் ஆரம்பத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டார். இப்போது தான் கொஞ்சம் முன்னேறி வந்தார். நேத்ரனுக்கு சொந்த வீடு கூட கிடையாது. அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்தார். அவருக்கு உடம்பு சரியில்லை என்று பார்க்க வருவதாக சொன்னோம். ஆனால், மறுத்துவிட்டார். ஆனால், சில தினங்களுக்கு முன் அவரது மகள் பிறந்தநாளுக்கு வீட்டுக்கு அழைத்தார். அவருக்கு உடநிலை சரியில்லாமல் இருந்தால் கூட அனைவருக்கும் மோடிவேஷ்னலாக பாசிட்டிவாக மெசேஜ் அனுப்புவார். ஆனால், அவரது மொபைலிலிருந்து அவர் காலமாகிவிட்டார் என்ற செய்தி வந்தது ரொம்பவும் வருத்தமாக இருக்கிறது' என்று கூறியிருக்கிறார்.