விடாமுயற்சி டிரைலர் வெளியானது ; ஆக்ஷனில் அதகளம் பண்ணும் அஜித் : பிப்., 6ல் படம் ரிலீஸ் | ஹாலிவுட் வெப் தொடரில் நடிக்கும் திஷா பதானி | பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் மமிதா பைஜூ | சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்? - ஜி.வி.பிரகாஷ் சொன்ன பதில் | இரும்புக்கை மாயாவி படத்தில் நடிக்கும் அமீர்கான்? | விஜய்க்கு சொன்ன மூன்று கதை : மகிழ் திருமேனி | சூப்பர் ஹீரோ கதையில் சூர்யா | ஸ்ருதிஹாசன் குரலில் வெளிவந்த டிரெயின் முன்னோட்டம் | டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 10 வருட பயணத்தை நினைவுகூர்ந்த ஆதி |
மலையாள இளம் நடிகரான பஹத் பாசில் கடந்த மூன்று வருடங்களில் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் நடிகராக கிடுகிடுவென வளர்ச்சி அடைந்துள்ளார். குறிப்பாக சமீப வருடங்களில் புஷ்பா, விக்ரம், மாமன்னன், சமீபத்தில் வெளியான வேட்டையன் என தமிழ் மற்றும் தெலுங்கில் சேர்த்து நான்கு படங்களில் தான் நடித்துள்ளார். இந்த நான்கு படங்களுமே வெற்றி படங்களாக மாறின. அது மட்டுமல்ல இந்த நான்கு படங்களிலும் அவரது கதாபாத்திரங்கள் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று அவருக்கென ஒரு தனி ரசிகர் வட்டமே தென் இந்திய அளவில் உருவாக்கி விட்டது.
அந்த வகையில் அடுத்ததாக மீண்டும் புஷ்பா 2 திரைப்படத்தில் அவரது நடிப்பை காண ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். படங்களில் தனது பங்களிப்பை 100 சதவீதம் கொடுத்து வரும் பஹத் பாசில் தான் நடித்து வரும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தொடர்ந்து தவிர்த்து வருகிறார் என்பதையும் பார்க்க முடிகிறது. மாமன்னன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. அதேபோல ரஜினிகாந்த் உடன் இணைந்து நடித்த வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் அவர் பங்கேற்கவில்லை. அந்தப்படத்தின் சக்சஸ் மீட்டிலும் கூட கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் தற்போது சென்னையில் மட்டுமல்ல கேரளாவில் கொச்சியில் நடைபெற்ற புஷ்பா 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியிலும் கூட பஹத் பாசில் கலந்து கொள்ளவில்லை. இத்தனைக்கும் இந்த படங்களின் ஹீரோக்கள் அனைவரும் தவறாமல் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார்கள். கேரளாவில் கொச்சியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற புஷ்பா 2 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் அல்லு அர்ஜுன் பேசும்போது கூட, “பஹத் பாசில், புஷ்பா 2 திரைப்படத்தில் மிகப்பெரிய பங்களிப்பை கொடுத்திருக்கிறார். நிச்சயம் மலையாள ரசிகர்களை பெருமைப்படுத்தும் விதமாக அவரது நடிப்பு இருக்கும். உண்மையிலேயே இன்று கொச்சியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் நாங்கள் இருவரும் ஒன்றாக கலந்து கொள்வோம் என்று தான் நினைத்தேன். ஆனால் இன்று அவரை நான் இங்கே ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்.” என்று கூறியிருந்தார்.
ஏதோ ஒரு நிகழ்வில் மட்டும் பஹத் பாசில் கலந்து கொள்ளவில்லை என்றால் அவர் ஏதோ வேலையாக இருக்கிறார் அல்லது வேறு படப்பிடிப்புகளில் கலந்து கொண்டிருக்கிறார் என சொல்லலாம். ஆனால் தொடர்ந்து தனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளாதது அவர் பொதுவெளியில் இப்படி தலை காட்டுவதை தவிர்க்கிறாரோ, படங்களில் நடிப்பது மட்டும்தான் தனது வேலை என்று நினைக்கிறாரோ என்று தான் எண்ண தோன்றுகிறது. அந்த வகையில் நடிகர் அஜித்தின் ரூட்டைத் தான் பஹத் பாசிலும் பின் தொடர்கிறாரோ என்கிற சந்தேகமும் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.