விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடியவர். இன்றும் பல தளங்களில் அவரது பாடல்கள் ஏதோ ஒரு விதத்தில் ரசிகர்களை மகிழ்வித்து கொண்டே இருக்கின்றன. அதே சமயம் தற்போது வேகமாக பரவி வரும் ஏ ஐ என்கிற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் இப்படி இறந்து போனவர்களின் குரலை மீள் உருவாக்கம் செய்து புதிய படங்களில் பாட வைக்கும் போக்கு துவங்கியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான், அனிருத், யுவன் சங்கர் ராஜா போன்றவர்கள் இதுபோன்று முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
குறிப்பாக 'தி கோட்' படத்தில் மறைந்த பவதாரணியின் குரலில் ஒரு பாடலையும், 'வேட்டையன்' படத்தில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாடல்களை உருவாக்கி இருந்தார்கள். ஆனாலும் இவை பரபரப்பாக பேசப்பட்டதே தவிர பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.
இந்த நிலையில் தனது தந்தை எஸ்.பி பாலசுப்ரமணியத்தின் குரலில் இதுபோன்று செயற்கை நுண்ணறிவு மூலம் மீண்டும் பாடல்கள் பாட வைப்பதில் தனக்கு விருப்பமில்லை என கூறியுள்ளார் அவரது மகனும் நடிகரும் பாடகருமான எஸ்பிபி சரண். இது குறித்து அவர் சமீபத்தில் கூறும்போது, “என்னதான் இப்படி பாடல்களை மறு உருவாக்கம் செய்தாலும் மறைந்தவர்களின் குரல்களில் மீண்டும் பாடல்களை பாடுவதாக உருவாக்கினாலும் அவர்கள் ஒரிஜினலாக பாடியபோது ஏற்பட்ட அந்த உணர்வுகளை நிச்சயமாக இவற்றில் கொண்டு வர முடியாது.
ஒரு டெக்னாலஜி கையில் இருக்கிறதனால எதுனாலும் பண்ணலாமா? தப்பா எடுத்துக்க வேண்டாம் இப்ப எஸ்பிபி இருந்திருந்தால் ஒருவேளை இந்தப் பாட்டு கேட்டுட்டு இந்தப் பாட்டு வேண்டாமே நான் பாட மாட்டேன்னு சொல்லியிருக்கலாம். இந்தப் பாட்டு நான் பாடுறேன், பாடலைங்கிற முடிவை பாடகர்கள் எடுப்பாங்க. ஏஐ அந்த வாய்ப்பை கொடுக்காது. நம்ம அவங்க மேல உள்ள அன்பால எல்லா பாட்டும் அவங்க பாடினா நல்லா இருக்கும்னு நினைக்கிறோம். அந்தக் குரலை கொண்டு வந்திடலாம். ஆனா, எமோஷனஸை கொண்டு வர முடியாது.
எஸ்பிபி.,யின் குரல் அவர் குரலாகவே இருந்து விட்டுப் போகட்டும்.. யாரோ ஒரு டாம் டிக் மற்றும் ஹாரி ஆகியோரின் இசையில் அவர் குரலை கேட்பதில் எனக்கும் என் குடும்பத்திற்கும் விருப்பமில்லை. அப்படி நிறைய பேர் கேட்டு வந்தும் அவர்களுக்கு நான் ஸ்ட்ரிக்ட்டாக நோ சொல்லிவிட்டேன். அவர் அவராகவே இருக்கட்டும்” என்று கூறியுள்ளார்.