எம்.என். ராஜம், எஸ்.பி. முத்துராமனுக்கு கலைத்துறை வித்தகர் விருது: முதல்வர் வழங்கினார் | நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு : தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் | தயாரிப்பாளர் சங்க தேர்தலில் ஓட்டுக்கு பணம், ஏகப்பட்ட பரிசு பொருட்களா? | சரத்குமார், ராதிகா படங்கள் ஒரே நாளில் மோதல்: மார்ச் 27ல் ஜெயிப்பது யார்? | ஒரே நாள் மோதலில் 'டாக்சிக், துரந்தர் 2' | பிளாஷ்பேக்: தரமான வெற்றியைத் தந்த “மதுரை வீரனும்” தங்கவாள் நன்கொடை வழங்கிய மக்கள் திலகமும் | சேயோன் : 24 வருடங்களுக்குப் பிறகு இணையும் நண்பர்கள் | தியாகராஜன் குமாரராஜா, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் 'பாக்கெட் நாவல்' | ஆன்மிகப் படங்களை நோக்கி நகரும் தமிழ், தெலுங்கு சினிமா | தெலுங்கில் சர்வானந்த் ஜோடியாக நடிக்கும் ருக்மணி வசந்த் |

பஹத் பாசில் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'ஆவேசம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது. அதைத் தொடர்ந்து 'வேட்டையன்' படத்தில் ரஜினியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் 'புஷ்பா 2' திரைப்படம் வெளியானது. அடுத்ததாக வடிவேலு, பஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள 'மாரீசன்' ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. அதேபோல மலையாளத்தில் பஹத் பாசில் நடித்துள்ள 'ஓடும் குதிரை சாடும் குதிரை' படப்பிடிப்பு முடிந்து அந்த படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
அதே சமயம் கடந்த வருடம் பிப்ரவரி மாதமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 'கராத்தே சந்திரன்' திரைப்படம் குறித்த தகவல்கள் எதுவும் அதன்பிறகு வெளியாகவில்லை.. ஒருவேளை அந்த படம் கிடப்பில் போடப்பட்டதா என்கிற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்தது. இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. பஹத் பாசில் சில வருடங்களுக்கு முன்பு சரிவில் இருந்தபோது அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் 'மகேஷிண்டே பிரதிகாரம்'. இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ராய் என்பவர் தான் இந்த கராத்தே சந்திரன் படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




