'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மலையாள திரையுலகில் நடிகர் மம்முட்டி தற்போதும் பிசியான முன்னணி நடிகராக தொடர்ந்து நடித்து வருகிறார். அவருக்கு 73 வயது ஆனாலும் படங்களிலும் சரி பொது நிகழ்ச்சிகளிலும் சரி சுறுசுறுப்பான இளைஞரை போலவே வலம் வருகிறார். ஆனாலும் வயது காரணமாக அவ்வப்போது அவருக்கு சில நேரங்களில் உடல்நல குறைவு ஏற்படுகிறது. அந்த சமயங்களில் எல்லாம் சோசியல் மீடியாக்களில் கண், காது, மூக்கு வைத்து அதை சீரியஸான செய்திகளாக்கி விடுகின்றனர். அப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு மம்முட்டி கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்கிற தகவல் வெளியானது. அதன் பிறகு அந்த செய்தியில் உண்மை இல்லை என்பது தெரிய வந்ததுடன் மம்முட்டி வழக்கம் போல ஆக்டிவாக படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மம்முட்டி மீண்டும் ஓய்வில் இருக்கிறார். இதனை தொடர்ந்து மீண்டும் அவருக்கு உடல் நல குறைவு என்பது போன்று சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியாக துவங்கியுள்ளன. இந்த நிலையில் கேரள மாநில ராஜ்யசபா எம்பியும் மம்முட்டியின் நெருங்கிய நண்பருமான ஜான் பிரிட்டாஸ், மம்முட்டியில் உடல் நலம் குறித்து தானாகவே ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
“மம்முட்டிக்கு சிறிய அளவிலான உடல் நல குறைவு தானே தவிர வேறு கவலைப்படும் படியாக எதுவும் இல்லை. அதற்கான சிகிச்சை அவர் எடுத்து வருகிறார். இது வயதாகும் போது சிலருக்கு ஏற்படுவது தான். அவர் இப்போது நன்றாகவே இருக்கிறார். அவருடன் கொஞ்ச நேரத்திற்கு முன்பு நான் செல்போனில் பேசி விட்டு தான் உங்களுக்கு இந்த தகவலை சொல்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இவர் மட்டுமல்லாது மம்முட்டி தரப்பிலிருந்து அவர்களது நிர்வாகிகள் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையிலும் கூட, அவருக்கு பெரிய உடல் நலக் குறைவு எதுவும் இல்லை. ரம்ஜான் காரணமாக அவர் விரதம் கடைபிடித்து வந்ததால் அதனால் ஏற்பட்ட உடல்நல குறைவுக்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு தற்போது அவர் நலமாக இருக்கிறார். ஓய்வில் இருக்கிறார் என்று கூறியுள்ளனர்.