Advertisement

சிறப்புச்செய்திகள்

கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆன்லைன் மோதல், ரசிகர்கள் சண்டை வேண்டாம் - பவன் கல்யாண் அட்வைஸ்

16 மார், 2026 - 10:06 IST
எழுத்தின் அளவு:
Online-clash,-fans-should-not-fight---Pawan-Kalyan-Advice
Advertisement


சமூக வலைத்தளங்களின் பக்கம் போலே சினிமா நடிகர்களின் ரசிகர்கள் போடும் சண்டைகளைப் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது. சமயங்களில் தரக்குறைவான வார்த்தைகளில் அந்த சண்டை இருக்கும். கடந்த சில வருடங்களாக அனைத்து மொழி சினிமாவிலும் இது போன்ற சண்டைகள் வாடிக்கையாகிவிட்டது.

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் ரசிகர்கள் இடையேதான் இந்த சண்டை அதிகம் இருக்கிறது. தெலுங்குப் பக்கம் போனால், அங்கு நிறைய முன்னணி ஹீரோக்கள் இருப்பதால் சண்டைகளும் அதிகம் இருக்கும்.

ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் நடித்து மார்ச் 19ல் வெளியாக உள்ள 'உஸ்தாத் பகத்சிங்' படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது இந்த சண்டைகள் குறித்து ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார் பவன் கல்யாண்.

அவர் பேசுகையில், “ஒவ்வொரு படமும் வெற்றி பெற வேண்டும் என உண்மையில் விரும்புகிறேன். அந்த வெற்றிப் படங்களில் என்னுடைய படமும் ஒன்றாக இருக்க வேண்டும். ஆன்லைன் மோதல், ரசிகர்களுக்கு இடையேயான சண்டை ஆகியவை இல்லாமல் ரசிகர்கள் அவர்களது அபிமான ஹீரோக்களின் படங்களைப் பார்த்து ரசிக்க வேண்டும்.

திரையுலகத்திற்கு இன்னும் நிறைய ஹீரோக்கள் வர வேண்டும். அதிகமான படங்கள் வந்தால்தான், சினிமாவை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ முடியும்.

ஒவ்வொரு ஹீரோவும் வருடத்திற்கு ஒரு சில படங்களில் மட்டும்தான் நடிக்க முடியும். அரசியலில் இருப்பதால் என்னால் ஒன்றிரண்டு படங்களில் நடிப்பதே பெரிய விஷயமாக உள்ளது. அனைத்து சினிமாவையும் பார்த்து அவற்றைக் கொண்டாடுங்கள்,” என கூறினார்.

இந்த விழாவில் தயாரிப்பாளர்கள், இயக்குனர் ஹரிஷ் சங்கர், நடிகைகள் ஸ்ரீலீலா, ராஷி கண்ணா, நடிகர் பார்த்திபன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
10 நாட்கள் நடித்த நிலையில் கமல் வெளியேறியதால் நின்று போன படம் ; இயக்குனர் பாலச்சந்திர மேனன் புது தகவல்10 நாட்கள் நடித்த நிலையில் கமல் ... மார்ச் 19ல் ஒரே ஒரு ரிலீஸ் தானா ? மார்ச் 19ல் ஒரே ஒரு ரிலீஸ் தானா ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap