தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
பாலிவுட்டில் முன்னாள் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் கரிஷ்மா கபூர். அவருக்கும் தொழிலதிபரான சஞ்சய் கபூருக்கும் திருமணம் நடந்து பின் விவாகரத்து பெற்றனர். கடந்த வாரம் இங்கிலாந்தில் போலோ விளையாடிய போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் சஞ்சய் மரணம் அடைந்தார். தேனீ ஒன்று அவருடைய வாய் வழியே மூச்சுக்குழாயில் புகுந்ததே மாரடைப்புக்குக் காரணம் என்று செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் சஞ்சய் கபூரின் உடல் டெல்லிக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. தனது முன்னாள் கணவர் சஞ்சயின் உடலுக்கு தனது மகன், மகள், தங்கை கரினா கபூர், இவரது கணவர் நடிகர் சைப் அலிகான் ஆகியோருடன் சென்று கரிஷ்மா இறுதி அஞ்சலி செலுத்தினார்.
கரிஷ்மாவுக்கு முன்னதாகவே நந்திதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டு இரண்டே வருடங்களில் அவரைப் பிரிந்துள்ளார் சஞ்சய். கரிஷ்மாவுடன் 11 வருடங்கள் ஒன்றாக இருந்துள்ளார். பின்னர், மூன்றாவதாக வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அவருடன் வசித்து வந்தார்.