23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் | பிளாஷ்பேக்: கமர்ஷியல் ஆக்ஷன் படம் இயக்கிய விசு | முகபருவிற்கு உமிழ்நீர் மருந்து என்கிறார் தமன்னா | 90வது பிறந்த நாளை கொண்டாடிய எம்.என்.ராஜம் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்திற்கு பாதுகாப்பு கேட்டு மனு | பிளாஷ்பேக் : இயக்குனராக, தயாரிப்பாளராக தோற்ற டி.ஆர்.மகாலிங்கம் |
சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த 'எம்புரான்' பட நிகழ்ச்சியில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறீர்கள், கமலின் உன்னை போல் ஒருவன் படத்தில் அப்படி நடித்தீர்கள். நீங்க பெரிய ஹீரோவாச்சே என்று கேட்டதற்கு, ''நான் நடிகன். எனக்கு நேரம், கதை நல்லா இருந்தால் அப்படி நடிப்பேன். சின்ன ரோல் பெரிய ரோல் என்று பார்க்கமாட்டேன்'' என்றார்.
இப்போது ரஜினியின் 'ஜெயிலர் 2'வில் மோகன்லால் இருக்கிறார். சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, அஜித் நடிக்க உள்ள படத்திலும் மோகன்லாலை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. மோகன்லால் நடித்த 'தொடரும்' பெரிய ஹிட் என்றாலும், முன்பே சொன்னதுபோல் இந்த படங்களில் சின்ன கேரக்டர் என்றாலும், அதில் நடிக்க அவர் ஆர்வமாக இருக்கிறாராம். தமிழக முன்னணி ஹீரோக்கள் மற்ற மொழி படங்களில் இப்படி கவுரவ வேடங்களில் நடிக்க தயங்குவது தனிக்கதை.