9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் 2024ம் ஆண்டு வெளிவந்த படம் 'புஷ்பா 2'. தெலுங்கில் தயாராகி பான் இந்தியா படமாக வெளிவந்தது. மொத்தமாக 1800 கோடி வரை வசூலித்த இந்தப் படத்தின் ஹிந்தி வசூல் மட்டுமே 800 கோடியாக அமைந்து புதிய சாதனையைப் படைத்தது.
'புஷ்பா 2' படம் சமீபத்தில் டிவியில், ஹிந்தியில் முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டது. அதன் ரேட்டிங் 5.1 ஆக அமைந்து 5 கோடிக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்துள்ளது.
சமீபத்தில் ஹிந்தியில் ஒளிபரப்பான படங்களில் நேரடி ஹிந்திப் படங்களான 'கட்டார் 2, ஜவான்' படங்களுக்குப் பிறகு மூன்றாவது ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. அதோடு, 'பதான், அனிமல்' ஆகிய படங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
நேரடி ஹிந்திப் படங்களுடன் தியேட்டர் வசூலில் போட்டி போட்டு சாதனை படைத்த 'புஷ்பா 2', டிவி ஒளிபரப்பிலும் சாதனை புரிந்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.