காதலர் தினம் : கமல் வெளியிட்ட வாழ்த்து பதிவு | அஜித் பட டைட்டிலில் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் சுந்தர் சி, குஷ்பு மகள் | சல்மான் கான் படத்திலிருந்து காதலர் தின ஸ்பெஷலாக வெளியிடப்பட்ட பாடல் | திகார் சிறையில் இருக்கும் நடிகருக்கு சம்பளம் உயர்த்தி தர கோரிக்கை வைத்த இயக்குனர் பிரியதர்ஷன் | விஸ்வக் சென்னுடன் எந்த வருத்தமும் இல்லை : அர்ஜுன் | ரஜினிகாந்த் சம்பளம் பற்றி பரவும் தகவல் | இரவு 11.30 மணிக்கு சிக்னலில் நடக்கும் கதை | தலைப்புக்காக 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்ட 'கபுள் பிரண்ட்லி' | சாய்பல்லவி சம்பளம் எகிறியது | ‛மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ் : மும்பையிலிருந்து வந்த லைலா |

ஐதரபாத்தில் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது ராமோஜி பிலிம் சிட்டி. அங்கு தெலுங்குப் படங்கள் மட்டுமல்லாது பல தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிப் படங்களின் படப்பிடிப்புகளும் நடக்கும். தமிழில் உள்ள டாப் நடிகர்களின் படங்களின் படப்பிடிப்பு அங்குதான் அதிகமாக நடைபெற்றுள்ளது. சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் அந்த ஸ்டுடியோ அமைந்துள்ளது. அரங்குகள், எடிட்டிங் உள்ளிட்ட வசதிகள் என ஒரு முழு படத்தை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் அங்கே உள்ளன.
கஜோல் நடித்து வெளியாக உள்ள 'மா' படத்திற்கான பேட்டி ஒன்றில் பேசிய போது, “ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு இருந்தால் ஒரு விதமான சங்கடம் இருக்கும். ஒரு விதமான பய உணர்வு வரும். அந்த இடத்தை விட்டு உடனே வெளியேறத் தூண்டும். சில இடங்களில் அப்படியான எண்ணம் வரும். மீண்டும் அங்கு வரக் கூடாது என்று நினைப்போம். அது போலத்தான் எனக்கு ராமோஜி பிலிம் சிட்டியில் உணர்வு வரும். உலகத்திலேயே மிகவும் பயமான ஒரு இடம் அது,” என்று கூறியுள்ளார்.
கஜோல் நடித்துள்ள 'மா' படம் ஒரு பேய்ப் படம், அடுத்த வாரம் ஜுன் 27ம் தேதி வெளியாக உள்ளது. 'பேய்' பற்றிய ஒரு பய உணர்வு ராமோஜி பிலிம் சிட்டியில் இருக்கும் என்ற அர்த்தத்தில்தான் கஜோல் பேசியுள்ளார். ஆனால், அப்படி என்ன ஒரு அனுபவத்தை அங்கு பெற்றார் என்பது குறித்து அவர் விளக்கமாகச் சொல்லவில்லை.
இந்த பேச்சு தெலுங்குத் திரையுலகத்தினரிடம் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.