லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை கஜோல். தற்போது கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டும் நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள திகில் கலந்த புராண படமான ‛மா' வரும் ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படம் தொடர்பான புரொமோஷனில் பிஸியாக இருந்த கஜோலை சந்தித்தபோது அவர் அளித்த பேட்டி....
‛மா' என்ற படத்தின் தலைப்பு ஆரம்பத்திலேயே முடிவு செய்யப்பட்டதா?
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோது தற்காலிகமாக தான் ‛மா' என தலைப்பு வைத்திருந்தோம். பின்னர் படம் தயாரானபின் அது என்ன சொல்கிறது, எதை பற்றி பேசுகிறது என பார்த்தோம். மேலும், படத்தின் முக்கிய கதாபாத்திரமான காளி மற்றும் படத்தில் காட்டப்படும் தாயின் கதை ஆகியவற்றுக்கு ‛மா' என்ற தலைப்பே மிகவும் பொருத்தமாக இருந்ததை உணர்ந்து அதையே தலைப்பாக்கி விட்டோம்.
படப்பிடிப்பில் எது உங்களுக்கு சவாலாக இருந்தது?
படம் முழுக்கவே எனக்கு சவாலாக இருந்தது. ஆனாலும் ஆக் ஷன் காட்சிகள் தான் படத்தில் மிகவும் சவாலாக அமைந்தது. காரணம் என் சினிமா பயணத்தில் முதன்முறையாக ஆக் ஷன் காட்சிகளில் நடித்துள்ளேன். முன்பெல்லாம் ஆக் ஷன் காட்சிகளில் என்ன இருக்கிறது என நினைத்தது உண்டு. ஆனால் அதை நான் செய்யும் போது தான் அதில் உள்ள சிரமங்களை உணர்ந்தேன். இப்போது எல்லா ஆக் ஷன் ஹீரோக்கள் மீதும் குறிப்பாக எனது கணவர் அஜய் தேவ்கன் மீதும் எனது மரியாதை பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஏனெனில், அவர் பல ஆக் ஷன் படங்களில் நடித்துள்ளார்.
ஆக் ஷன் காட்சிகளில் நடிக்க அஜய் தேவ்கன் எதுவும் டிப்ஸ் தந்தாரா...?
இல்லை, அவர் எந்த டிப்ஸும் தரவில்லை. ஆனால் படத்தில் எனது ஆக் ஷன் காட்சிகளை பார்த்துவிட்டு நான் நன்றாக செய்திருப்பதாகவும், இவ்வளவு சிறப்பாக நான் ஆக் ஷன் செய்வேன் என எதிர்பார்க்கவில்லை என்று அவர் கூறினார்.
இன்றைய காலத்தில் ஒரு குழந்தைக்கு தாயின் பொறுப்பு மாறிவிட்டதாக நினைக்கிறீர்களா?
என்னை பொருத்தவரை எதுவும் மாறவில்லை. முன்பு இருந்தது இப்போதும் உள்ளது. இன்னமும் மக்கள், நீங்கள் தவறு செய்தால் உங்கள் தாய் எதுவும் செல்லவில்லையா என்று கூறுவார்கள். மற்றவர்களை மதிக்க வைப்பது ஒரு தாயின் பொறுப்பு. இன்றைய காலத்தில் தாய் மட்டுமல்ல, தந்தையும் சேர்ந்து குழந்தைகளுக்கு சரி மற்றும் தவறை கற்பிக்கிறார்கள் என்றே உணர்கிறேன்.
இவ்வாறு கஜோல் தெரிவித்தார்.