பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை | ஆண்ட்ரியா படத்தின் காட்சிகளை மாற்ற நீதிமன்றம் உத்தரவு | ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் |
நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முதல் முதலாக இணைந்துள்ள கூலி படம் ஆகஸ்ட் 14ல் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் ஏற்கனவே ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்திருந்த பஹத் பாசில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால் அவர் நடிக்கவில்லை. அது குறித்து லோகேஷ் கனகராஜ் கூறுகையில், கூலி படத்தில் பஹத் பாசிலை நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே ஆறு மாதங்களுக்கு மேலாக ஒரு கதாபாத்திரம் தயார் செய்தேன். ஆனால் அவர் பல படங்கள் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் அவரது கால்ஷீட் கிடைக்கவில்லை. அதனால் தான் பஹத் பாசில் நடிக்க வேண்டிய அந்த கதாபாத்திரத்திற்கு இன்னொரு மலையாள நடிகரான சவுபின் ஷாகிரை ஒப்பந்தம் செய்தேன் என்கிறார் லோகேஷ். மேலும், சமீபத்தில் வெளியான மோனிகா பாடலில் பூஜா ஹெக்டேவுடன் சவுபின் ஷாகிரும் நடனம் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.