விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு | 50 கோடியில் காசி செட் : ராஜமவுலி படத்துக்காக தயாராகுது | ‛பஞ்சாயத்து' சீரிஸ் என்னை இந்தியா முழுக்க அறிய வைத்திருக்கிறது - நீனா குப்தா பெருமிதம் | டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி | 'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை | ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி | தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? | குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் மற்றும் பலர் நடிப்பில் 2024ம் ஆண்டு வெளிவந்த படம் 'புஷ்பா 2'. தெலுங்கில் தயாராகி பான் இந்தியா படமாக வெளிவந்தது. மொத்தமாக 1800 கோடி வரை வசூலித்த இந்தப் படத்தின் ஹிந்தி வசூல் மட்டுமே 800 கோடியாக அமைந்து புதிய சாதனையைப் படைத்தது.
'புஷ்பா 2' படம் சமீபத்தில் டிவியில், ஹிந்தியில் முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டது. அதன் ரேட்டிங் 5.1 ஆக அமைந்து 5 கோடிக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்துள்ளது.
சமீபத்தில் ஹிந்தியில் ஒளிபரப்பான படங்களில் நேரடி ஹிந்திப் படங்களான 'கட்டார் 2, ஜவான்' படங்களுக்குப் பிறகு மூன்றாவது ரேட்டிங்கைப் பெற்றுள்ளது. அதோடு, 'பதான், அனிமல்' ஆகிய படங்களை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
நேரடி ஹிந்திப் படங்களுடன் தியேட்டர் வசூலில் போட்டி போட்டு சாதனை படைத்த 'புஷ்பா 2', டிவி ஒளிபரப்பிலும் சாதனை புரிந்துள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.